அரசு கலைக் கல்லூரியில் மாணவர் சேர்க்கைக்கான முதற்கட்ட கலந்தாய்வு


அரசு கலைக் கல்லூரியில் மாணவர் சேர்க்கைக்கான முதற்கட்ட கலந்தாய்வு
x

குளித்தலை டாக்டர் கலைஞர் அரசு கலைக் கல்லூரியில் மாணவர் சேர்க்கைக்கான முதற்கட்ட கலந்தாய்வு தொடங்கியது.

கரூர்

முதற்கட்ட கலந்தாய்வு

கரூர் மாவட்டம் குளித்தலை டாக்டர் கலைஞர் அரசு கலைக் கல்லூரியில் 2023- 2024-ம் கல்வி ஆண்டுக்கான இளங்கலை மற்றும் இளம் அறிவியல் பாடப்பிரிவுகளில் மாணவ, மாணவிகள் சேர்க்கைக்கான கலந்தாய்வு நேற்று முன்தினம் தொடங்கியது.

இதில் ஓய்வு பெற்ற ராணுவ வீரர்களின் வாரிசு, மாற்றுத்திறனாளிகள், தேசிய மாணவர் படை மாணவர்கள், விளையாட்டு வீரர்கள் உள்ளிட்ட சிறப்பு ஒதுக்கீட்டு பிரிவினருக்கான கலந்தாய்வு நடந்தது. விளையாட்டு துறை, தேசிய மாணவர் படை, மாற்றுத் திறனாளி, ஆகிய பிரிவின் கீழ் கலந்தாய்வில் கலந்து கொண்ட மாணவ, மாணவிகள் சேர்க்கைக்கான கடிதத்தை கல்லூரி முதல்வர் ரவிச்சந்திரன் அவர்களிடம் வழங்கினார்.

இளம் அறிவியல்

மாணவர் சேர்க்கை குழு பேராசிரியர்கள் ராமநாதன், அன்பரசு, முனைவர் சக்திவேல் மற்றும் பேராசிரியர்கள் உடன் இருந்தனர் ஜூன் 3-ந் தேதி காலை 10 மணிக்கு இளம் வணிகவியல், இளம் வணிகவியல் (கணினி பயன்பாட்டியல்) வணிக நிர்வாகவியல் ஆகிய பாடங்களுக்கான பொது கலந்தாய்வு நடைபெற உள்ளது.

இதனையடுத்து ஜூன் 6-ந் தேதி காலை 10 மணிக்கு இளம் அறிவியல் பாடப் பிரிவுகளுக்கான கலந்தாய்வும், 7-ந் தேதி காலை 10 மணிக்கு மொழி பாடத்திற்கான கலந்தாய்வு நடக்க உள்ளது.

மேற்கண்ட நாட்களில் நடக்கும் கலந்தாய்வுக்கான அழைப்பானை, அந்தந்த பாடப்பிரிவுகளுக்கு விண்ணப்பித்து இருப்பவர்களுக்கு துறை சார்பில் தெரிவிக்கப்படும் அழைப்பானை பெறப்பட்ட மாணவர்கள் மாணவர் சேர்க்கை கலந்தாய்வில் கலந்து கொள்ளுமாறு கல்லூரி முதல்வர் தெரிவித்துள்ளார்.


Next Story