ஓய்வு பெற்ற போக்குவரத்து தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்


ஓய்வு பெற்ற போக்குவரத்து தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்
x

நெல்லையில் ஓய்வு பெற்ற போக்குவரத்து தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

திருநெல்வேலி

நெல்லை வணணார்பேட்டை அரசு போக்குவரத்து கழக தாமிரபரணி பணிமனை முன்பு நேற்று தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக ஓய்வு பெற்றோர் நலமைப்பினர் (ரேவா) சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அரசு அறிவித்தபடி 2022-ம் ஆண்டு ஏப்ரல் முதல் நவம்பர் வரை உள்ள பணப்பலன்களை வழங்கிட வேண்டும். பணி ஓய்வு பெறும் தேதியில் பணப்பலன்களை வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அமைப்பின் தலைவர் தானுமூர்த்தி தலைமை தாங்கினார். நிர்வாகிகள் எட்டப்பன், மதுசேகர், மாரிமுத்து, சுப்பையா, பூதலிங்கம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். பொதுச் செயலாளர் முத்துகிருஷ்ணன், அரசு விரைவு போக்குவரத்து கழக பொதுச்செயலாளர் வெங்கடாசலம், இணை செயலாளர். சிவதானு தாஸ் ஆகியோர் பேசினார்கள்.

இதில் மாநில குழு உறுப்பினர் பழனி, ராமையா பாண்டியன், மாணிக்கம், முகமது மைதீன், தங்கமாரி, தர்மராஜ் உட்பட பலர் கலந்து கொண்டனர்.


Next Story