வீரராகவ பெருமாள் கோவிலில் சாமி தரிசனம்; முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்து பக்தர்கள் வழிபாடு


வீரராகவ பெருமாள் கோவிலில் சாமி தரிசனம்; முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்து பக்தர்கள் வழிபாடு
x

மகாளய அமாவாசையை ஒட்டி வீரராகவ பெருமாள் கோவில் குளக்கரையில் மறைந்த முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்தனர்.

திருவள்ளூர்

திருவள்ளூர்,

திருவள்ளூரில் உள்ள மிகவும் பழமை வாய்ந்த 108 திவ்ய தேசங்களில் ஒன்றாக திகழும் ஸ்ரீதேவி பூதேவி சமேத வைத்திய வீரராகவ பெருமாள் கோவில் உள்ளது. மகாளய அமாவாசையை முன்னிட்டு நேற்று திருவள்ளூர், ஊத்துக்கோட்டை, பெரியபாளையம், பூந்தமல்லி, கடம்பத்தூர், பேரம்பாக்கம், ஆந்திர மாநிலம் என மாவட்டத்தின் பல்வேறு பகுதியில் இருந்த ஆயிரத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் கோவில் வளாகத்தில் திரண்டனர். அப்போது அவர்கள் கோவில் அருகே உள்ள குளக்கரையில் அமர்ந்து மறைந்த தங்களின் முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்தனர். அதைத் தொடர்ந்து பக்தர்கள் நீண்ட வரிசையில் நீண்ட நேரம் காத்திருந்து சாமி தரிசனமும் செய்தனர்.

அதேபோல் மகாளய அமாவாசையை ஒட்டி, திருத்தணி முருகன் கோவில் மலையடி வாரத்தில் உள்ள சரவண பொய்கை, நல்லாங்குளம் மற்றும் சதாசிவ லிங்கேஸ்வரர் கோவில் குளம் ஆகிய இடங்களில் தர்ப்பணம் கொடுக்கும் நிகழ்ச்சி நேற்று நடந்தது. அதிகாலை 5 மணி முதல் மாலை, 3 மணி வரை பொதுமக்கள் தங்களது முன்னோருக்கு தர்ப்பணம் கொடுத்து, நேர்த்தி கடனை செலுத்துவதற்கு குவிந்தனர்.


Next Story