திருப்பூர் மாநகராட்சி அலுவலகத்தில் நர்சுகளை அலறவிட்ட குட்டி சாரை பாம்பு


திருப்பூர் மாநகராட்சி அலுவலகத்தில் நர்சுகளை அலறவிட்ட குட்டி சாரை பாம்பு
x

திருப்பூர் மாநகராட்சி அலுவலகத்தில் நர்சுகளை அலறவிட்ட குட்டி சாரை பாம்பு பிடிபட்டது

திருப்பூர்


திருப்பூர் மாநகராட்சி அலுவலகத்தில் நர்சுகளை அலறவிட்ட குட்டி சாரை பாம்பு பிடிபட்டது

சாரை பாம்பு

திருப்பூர் மாநகராட்சி அலுவலக வளாகத்தில் ஆணையாளர் அலுவலகம் உள்ளது. இந்த கட்டிடத்தின் தரைத்தளத்தில் இருக்கும் 'லிப்ட்' அருகே மாநகராட்சியின் மருத்துவ பிரிவு செயல்பட்டு வருகிறது.

இங்கு சுகாதார நிலையங்களுக்கு தேவையான குறிப்பிட்ட சில பொருட்கள் வைக்கப்பட்டுள்ளன. இந்த நிலையில் நேற்று மாலை இந்த அலுவலகத்தில் நர்சுகள், மருந்தாளுனர்கள் அலுவலக பணியில் ஈடுபட்டு கொண்டிருந்தனர். அப்போது அங்கு திடீரென வந்த ஒரு குட்டி சாரை பாம்பு வேகமாக அலுவலகத்தின் உள்ளே புகுந்தது.

பிடிபட்டது

இதைப்பார்த்து அவர்கள் கூச்சலிட்டவாறு அலறியடித்து வெளியே வந்தனர். அதற்குள் அந்த பாம்பு அறையின் உள்ளே எங்கோ பதுங்கி விட்டது. இந்த தகவல் அங்கு காட்டுத்தீயாக பரவியதும் அங்கு மாநகராட்சி ஊழியர்கள் குவிந்தனர்.

இதுகுறித்து பாம்பு பிடி வீரர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. உடனடியாக திருப்பூரை சேர்ந்த பாலாஜிராஜா என்ற பாம்பு பிடி வீரர் மாநகராட்சி அலுவலகத்துக்கு வந்தார். அவர் அந்த அறையில் உள்ள ஒரு பீரோவின் பின்னால் பதுங்கி இருந்த பாம்பை லாவகமாக பிடித்தார். சுமார் 3 அடி நீளம் இருந்த அந்த பாம்பின் வயது 6 மாதம் இருக்கும் என ெதரிகிறது.


Related Tags :
Next Story