மாற்றுத்திறனாளிகளுக்கு விளையாட்டு போட்டி


மாற்றுத்திறனாளிகளுக்கு விளையாட்டு போட்டி
x
தினத்தந்தி 31 Jan 2023 6:45 PM GMT (Updated: 31 Jan 2023 6:45 PM GMT)

நாகையில் மாற்றுத்திறனாளிகளுக்கான விளையாட்டு போட்டிகளில் 100 பேர் கலந்து கொண்டனர்.

நாகப்பட்டினம்

நாகையில் மாற்றுத்திறனாளிகளுக்கான விளையாட்டு போட்டிகளில் 100 பேர் கலந்து கொண்டனர்.

முதல்- அமைச்சர் கோப்பை

நாகை மாவட்டத்தில் 2022-23-ம் ஆண்டிற்கான தமிழ்நாடு முதல்-அமைச்சர் கோப்பைக்கான விளையாட்டுப் போட்டிகள் நடந்து வருகிறது. முதல்கட்டமாக பள்ளி மாணவ, மாணவிகளுக்கு மாவட்ட அளவிலான விளையாட்டுப் போட்டிகள் நடத்தப்பட்டது. இதில் கபடி, தடகளம், கூடைப்பந்து, இறகுபந்து, நீச்சல் உள்ளிட்ட போட்டிகள் நடத்தப்பட்டன.

இதைத்தொடர்ந்து சிலம்பம், கால்பந்து உள்ளிட்ட போட்டிகள் நடத்தப்பட்டது. இதில் 5 ஆயிரம் மாணவ- மாணவிகள் கலந்து கொண்டு விளையாடி வருகின்றனர்.

விளையாட்டு போட்டிகள்

இந்த நிலையில் முதல்-அமைச்சர் கோப்பைக்கான விளையாட்டு போட்டியின் ஒரு பகுதியாக நாகை மாவட்ட விளையாட்டு மைதானத்தில் நேற்று மாற்றுத்திறனாளிகளுக்கான விளையாட்டு போட்டிகள் நடத்தப்பட்டது. போட்டியை கலெக்டர் அருண தம்புராஜ் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

இதில் தடகளம், இறகுபந்து, எறிபந்து, சிறப்பு கைப்பந்து, கபடி ஆகிய விளையாட்டு போட்டிகள் நடக்கிறது. அரசு பணியாளர்கள் பிரிவில் தடகளம், சதுரங்கம், இறகுப்பந்து, கபடி, கைப்பந்து ஆகிய விளையாட்டு போட்டிகள் நடைபெற்றன. இதில் 100-க்கும் மேற்பட்ட மாற்றுத்திறனாளிகள் கலந்து கொண்டனர்.


Next Story