தெருநாய் தொல்லையை கட்டுப்படுத்த வேண்டும்


தெருநாய் தொல்லையை கட்டுப்படுத்த வேண்டும்
x
தினத்தந்தி 31 Jan 2023 6:45 PM GMT (Updated: 31 Jan 2023 6:46 PM GMT)

தெரு நாய் தொல்லையை கட்டுப்படுத்த வேண்டும் என்று பொள்ளாச்சி நகராட்சி கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.

கோயம்புத்தூர்

தெரு நாய் தொல்லையை கட்டுப்படுத்த வேண்டும் என்று பொள்ளாச்சி நகராட்சி கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.

நகராட்சி கூட்டம்

பொள்ளாச்சி நகராட்சி கூட்டம் நேற்று மாலை கூட்டரங்கில் நடைபெற்றது. இதற்கு தலைவர் சியாமளா நவநீதகிருஷ்ணன் தலைமை தாங்கினார்.

கூட்டத்தில் ஒருங்கிணைந்த மீன் மார்க் கெட் கட்டுதல், சிறு பாலம் அமைத்தல், சேதமடைந்த சாலை களை சீரமைத்தல் உள்பட வளர்ச்சி பணிகள் மேற்கொள்ளுதல் தொடர்பாக 47 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

கூட்டத்தில் துணை தலைவர் கவுதமன்:

ஓம்பிரகாஷ் தியேட்டர் முதல் ஜோதிநகர் வரை சாலையில் தெருவிளக்குகள் எரிவதில்லை. இதனால் பொதுமக்கள் அச்சப்படுகின்றனர். எனவே தெருவிளக்குகளை எரிய வைக்க வேண்டும்.

நகராட்சி உரமாக்கல் மையத்தில் சுகாதாரத்தை பாதுகாக்க வேண்டும்.

அதிகாரிகள் பதில் அளிப்பதில்லை

கவுன்சிலர் ஜேம்ஸ்ராஜா (அ.தி.மு.க.): பொள்ளாச்சி நகராட்சி யில் சுகாதார பணிகள் குறித்து பொதுமக்கள் தகவல் தெரிவிக்க இலவச எண் அறிவிக்கப்பட்டு உள்ளது. அந்த புகார்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து புகார்தாரரின் செல்போன் எண்ணுக்கு குறுஞ்செய்தி அனுப்பும் வசதியை ஏற்படுத்த வேண்டும்.

வார்டு பகுதிகளில் தெருநாய்கள் தொல்லை அதிகமாக உள்ளது. இதனால் பெண்கள், குழந்தைகள் தெருவில் நடமாட முடியவில்லை. ஆழியாற்றில் உப்பு தண்ணீர் கலப்பதால் குடிநீரின் சுவை மாறுபடுகிறது. இதனால் மக்கள் அவதிப்கின்றனர்.

சையது யூசப் (ம.தி.மு.க.): கவுன்சிலர்கள் கொடுக்கும் விண்ணப் பங்கள் மீது நகராட்சி அதிகாரிகள் உரிய பதில் அளிப்பதில்லை.

இது போல் பொதுமக்கள் தெரிவிக்கும் புகார்கள் மீதும் நடவடிக்கை எடுப்பதில்லை. எனவே புகார்கள், மனுக்கள் மீது அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

குடிநீரின் சுவை

இந்திரா கிரி (தி.மு.க.): போலீஸ் குடியிருப்பு கட்டாமல் இருப்ப தால் புதர்மண்டி கிடக்கிறது. அங்கு அடிக்கடி பாம்பு புகுவது குறித்து புகார் தெரிவித்தும் அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பது இல்லை.

எனவே புதர்களை அகற்ற வேண்டும். 3 வார்டுகளுக்கு ஒரு குப்பை வாகனம் உள்ளதால் குப்பை வாங்கும் பணி பாதிக்கப்படுகிறது.

இதை தொடர்ந்து நகராட்சி தலைவர் சியாமளா நவநீதகிருஷ் ணன் பேசும் போது, ஆழியாற்றில் தென்னை நார் தொழிற்சாலை கழிவுகள் கலப்பதால் குடிநீரின் சுவை மாறுபடுகிறது.

எனவே கழிவுகள் கலக்கும் பகுதிகளுக்கு முன்பாக குடிநீரை எடுப்பதற்கு அரசுக்கு கருத்துரு அனுப்பப்பட்டு உள்ளது. நாய் தொல்லையை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும்.

குப்பை அள்ளும் பணி பாதிக்கப்பட்டால் கவுன்சிலர்கள் சம்பந்தப்பட்ட சுகாதார ஆய்வாளர்களை தொடர்பு கொள்ளலாம் என்றார்.


Next Story