விபத்துகளை தடுக்க சாலையை அகலப்படுத்த வேண்டும்


விபத்துகளை தடுக்க சாலையை அகலப்படுத்த வேண்டும்
x
தினத்தந்தி 31 Jan 2023 6:45 PM GMT (Updated: 31 Jan 2023 6:47 PM GMT)

பொள்ளாச்சி சேரன்நகரில் விபத்துகளை தடுக்க சாலையை அகலப்படுத்த வேண்டும் என்று வாகன ஓட்டிகள் வலியுறுத்தி வருகின்றனர்.

கோயம்புத்தூர்

பொள்ளாச்சி சேரன்நகரில் விபத்துகளை தடுக்க சாலையை அகலப்படுத்த வேண்டும் என்று வாகன ஓட்டிகள் வலியுறுத்தி வருகின்றனர்.

தற்காலிக தடுப்புகள்

பொள்ளாச்சி- கோவை ரோட்டில் தினமும் ஆயிரக்கணக்கான வாகனங்கள் சென்று வருகின்றன. இந்த ரோட்டில் சேரன் நகர் பகுதியில் நான்கு வழிச்சாலையில் மிக குறுகிய வளைவு உள்ளது.

இதனால் அங்கு அடிக்கடி வாகனங்கள் விபத்தில் சிக்கி கொள் கின்றன. அந்த பகுதியில் கடந்த வாரம் மீட்பு வாகனம் மோதி மோட்டார் சைக்கிளில் சென்ற தம்பதி பரிதாபமாக உயிரிழந்தது.

இந்த நிலையில் சேரன்நகர் பகுதியில் விபத்து ஏற்படுவதை தடுக்க மகாலிங்கபுரம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் திருமலைசாமி மற்றும் போலீசார் தற்காலிகமாக தடுப்புகளை வைத்தனர்.

ஆனாலும் அந்த சாலையில வளைவு பகுதி குறுகலாக உள்ள தால் வாகன ஓட்டிகள் மிகவும் மெதுவாக செல்ல வேண்டும் என்று போலீசார் அறிவுறுத்தினர்.

மேலும் அங்கு தானியங்கி சிக்னல் மற்றும் விபத்துகளை தடுக்கும் வகையில் விழிப்புணர்வு அறிவிப்பு பலகை வைக்கப்பட உள்ளதாக போலீசார் தெரிவித்த னர்.

குறுகிய வளைவு

இது குறித்து சமூக ஆர்வலர்கள் கூறியதாவது:-

பொள்ளாச்சி-கோவை ரோடு சேரன் நகரில் மிகவும் குறுகிய வளைவு உள்ளது. அங்கு நான்கு வழிச்சாலை அமைக்கும் போது குறுகலான சாலையை அகலப்படுத்தி நேராக அமைக்க வேண்டும் என்று அதிகாரிகளிடம் வலியுறுத்தப்பட்டது.

ஆனால் அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்காமல் சாலையை வளைவாகவே அமைத்து விட்டனர். இதன் காரணமாக தொடர்ந்து விபத்துகள் ஏற்பட்டு வருகிறது. சமீபத்தில் நடை பெற்ற விபத்தில் 2 பேர் இறந்தனர்.

ஆய்வு செய்ய வேண்டும்

எனவே குறுகிய வளைவான பகுதியில் சாலையை அகலப்படுத்தி நேராக அமைக்க வேண்டும். அதற்கு தேவையான நிலங்களை கையகப்படுத்தி பணிகளை மேற்கொள்ள வேண்டும். இதற்கு உரிய ஆய்வுகளை அதிகாரிகள் மேற்கொள்ள வேண்டும்.

எனவே மீண்டும் விபத்து ஏற்பட்டு உயிர் பலி ஏற்படுவதற்கு முன்னதாக அந்த பகுதியில் சாலையை நேராக அமைக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.


Next Story