மாமல்லபுரம் அருகே அளவுக்கு அதிகமாக ஏரி மண் எடுக்கப்பட்டதால் லாரிகள் சிறைபிடிப்பு


மாமல்லபுரம் அருகே அளவுக்கு அதிகமாக ஏரி மண் எடுக்கப்பட்டதால் லாரிகள் சிறைபிடிப்பு
x

மாமல்லபுரம் அருகே அளவுக்கு அதிகமாக ஏரி மண் எடுக்கப்பட்டதால் லாரிகள் சிறைபிடிக்கப்பட்டது.

செங்கல்பட்டு

லாரி மூலம் மண்

இரு வழிப்பாதையாக உள்ள மாமல்லபுரம்-புதுச்சேரி தேசிய நெடுஞ்சாலையை, நான்கு வழி சாலையாக விரிவாக்கம் செய்யும் பணிகள் நடந்து வருகிறது.. இந்த சாலை விரிவாக்க பணிக்காக மாமல்லபுரம் அருகே உள்ள கடம்பாடி, மணமை, வாயலுார் போன்ற பகுதிகளில் உள்ள பொதுப்பணித்துறைக்கு சொந்தமான ஏரிகளில் மண் எடுக்க செங்கல்பட்டு மாவட்ட நிர்வாகம் அனுமதி அளித்துள்ளது. இந்த மாத தொடக்கம் முதல் மாமல்லபுரம் அருகே உள்ள மண்மை ஏரியில் லாரி மூலம் மண் எடுக்கப்படுகிறது.

லாரிகள் சிறைபிடிப்பு

அரசு அனுமதித்த அளவை விட அதிகமாக மண் எடுப்பதாகவும், அதிக ஆழத்தில் தோண்டப்பட்டு மண் எடுக்கப்பட்டு வருவதால் நிலத்தடி நீர் ஆதாரம் பாதிக்கப்படும் சூழல் உள்ளதாகவும் பொதுமக்களிடம் இருந்து குற்றச்சாட்டு எழுந்தது. இந்த நிலையில் வருவாய்த்துறை கண்காணிப்பின்றி அனுமதி பெறாத லாரிகளில் மண் கொண்டு செல்லப்படுவதாக, மாவட்ட நிர்வாகத்திடம் பொதுமக்கள் சார்பில் புகார் தெரிவிக்கப்பட்டது. பின்னர் அதிகாரிகள் இந்த புகாரின் மீது எந்தவித நடவடிக்கையும் எடுக்காத நிலையில், முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் வீராசாமி தலைமையில் அந்த பகுதியை சேர்ந்த ஏராளமானோர் மண் அள்ள வந்த லாரிகளை சிறைபிடித்து போராட்டம் நடத்தினர். தகவல் அறிந்து சென்ற மாமல்லபுரம் போலீசார், சம்பந்தப்பட்ட வருவாய்த்துறைக்கு தகவல் தெரிவித்து நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்ததால் சிறைபிடிக்கப்பட்ட லாரிகளை விடுவித்து கிராம மக்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.


Next Story