செல்போன் இருந்தால் போதும்.. திருமலையில் ஒரு இடத்தில் இருந்து மற்றொரு இடத்திற்கு எளிதாக செல்ல புதிய வசதி


செல்போன் இருந்தால் போதும்.. திருமலையில் ஒரு இடத்தில் இருந்து மற்றொரு இடத்திற்கு எளிதாக செல்ல புதிய வசதி
x

திருமலையில் கோவிலை தவிர மற்ற பகுதிகளுக்கு செல்ல பக்தர்களின் இந்த சிரமத்தை போக்க தேவஸ்தானம் புதிய வசதியை உருவாக்கி உள்ளது.

திருமலை:

திருமலையில் உள்ள தேவஸ்தானத்துக்கு சொந்தமான விருந்தினர் இல்லங்கள், விடுதி வளாகங்கள், வைகுந்தம் வரிசை வளாகங்கள், லட்டு கவுண்ட்டர்கள், மருத்துவமனை, போலீஸ் நிலையங்கள், விஜிலென்ஸ் அலுவலகங்கள் உள்ளிட்ட 40-க்கும் மேற்பட்ட அலுவலகங்கள் உள்ளன. தமிழ்நாடு உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் இருந்து தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் திருமலைக்கு வருகின்றனர்.

அவர்கள் கோவிலை தவிர மற்ற பகுதிகளுக்கு செல்ல வேண்டுமானால் மற்றவர்களிடம் கேட்டு தெரிந்து கொண்டு செல்லவேண்டிய நிலை உள்ளது. பக்தர்களின் இந்த சிரமத்தை போக்க தேவஸ்தானம் புதிய வசதியை உருவாக்கி உள்ளது.

அதன்படி திருமலைக்கு வரும் பக்தர்கள் ஆன்ட்ராய்டு போன் வைத்திருந்தால் அதில் கியூ ஆர் கோடை ஸ்கேன் செய்ய வேண்டும். அவ்வாறு ஸ்கேன் செய்தால் பக்தர்கள் பஸ் நிலையத்தில் இருந்து முதன்மை செயல் அலுவலர் அலுவலகம், வைகுந்தம் கியூ வளாகம் உள்ளிட்ட துறை வாரியாக பெயர்கள் தெரியும்.

அதில் பக்தர்கள் எங்கு செல்ல விரும்புகிறார்களோ அதை கிளிக் செய்தால், வரைபடம் காட்டப்படும். அதன்மூலம் நேரடியாக அங்கு செல்லலாம். இந்த வசதி விரைவில் அறிமுகப்படுத்தப்பட உள்ளது. இதனை தேவஸ்தான அதிகாரி தர்மாரெட்டி ஆய்வு செய்தார்.


Next Story