புரட்டாசி மகாளய அமாவாசையையொட்டி கொடுமுடி காவிரி கரையில் முன்னோர்களுக்கு திதி- தர்ப்பணம் கொடுத்து பக்தர்கள் வழிபாடு


புரட்டாசி மகாளய அமாவாசையையொட்டி  கொடுமுடி காவிரி கரையில் முன்னோர்களுக்கு திதி- தர்ப்பணம் கொடுத்து பக்தர்கள் வழிபாடு
x

புரட்டாசி மகாளய அமாவாசையையொட்டி கொடுமுடி காவிரி கரையில் முன்னோர்களுக்கு திதி மற்றும் தர்ப்பணம் கொடுத்து பக்தர்கள் வழிபட்டனர்.

ஈரோடு

கொடுமுடி

புரட்டாசி மகாளய அமாவாசையையொட்டி கொடுமுடி காவிரி கரையில் முன்னோர்களுக்கு திதி மற்றும் தர்ப்பணம் கொடுத்து பக்தர்கள் வழிபட்டனர்.

மகுடேஸ்வரர் கோவில்

கொடுமுடியில் மிகவும் பிரசித்தி பெற்ற மும்மூர்த்திகள் தலமான மகுடேஸ்வரர் வீரநாராயண பெருமாள் கோவில் உள்ளது. பக்தர்களின் முக்கிய பரிகார தலமாக இந்த கோவில் விளங்குகிறது.

இதனால் ஏராளமான பக்தர்கள் அமாவாசை உள்பட விசேஷ நாட்களில் இங்கு வந்து காவிரி ஆற்றில் புனித நீராடி தங்களுடைய முன்னோர்களுக்கு திதி மற்றும் தர்ப்பணம் கொடுப்பார்கள். மேலும் செவ்வாய் தோஷம், நாக தோஷம், திருமண தடை போன்றவைகளுக்கு பரிகாரம் செய்யும் முக்கிய இடமாகவும் கொடுமுடி விளங்குகிறது.

திதி- தர்ப்பணம்

இந்த நிலையில் புரட்டாசி மகாளய அமாவாசையையொட்டி நேற்று அதிகாலை முதலே ஏராளமான பக்தர்கள் வெளியூர் மற்றும் வெளிமாநிலங்களில் இருந்து இங்கு வந்தனர். பின்னர் அவர்கள் காவிரி ஆற்றுக்கு சென்று புனித நீராடி சூரியனை வழிபட்டனர். மேலும் பக்தர்கள் காவிரி ஆற்றங்கரையில் தங்களுடைய முன்னோர்களுக்கு திதி மற்றும் தர்ப்பணம் கொடுத்து வழிபட்டனர். இதைத்தொடர்ந்து காவிரியில் புனிதநீராடி கோவிலுக்கு சென்று மகுடேஸ்வரர், வடிவுடை நாயகி, ஆஞ்சநேயர், பிரம்மா, மகாலட்சுமி, வீரநாராயண பெருமாள், சனீஸ்வரர், காலபைரவர் மற்றும் நவக்கிரகங்களை வழிபட்டனர்.

இதற்கான ஏற்பாடுகளை கோவில் செயல் அலுவலர் யுவராஜ் தலைமையில் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. இதையொட்டி கொடுமுடி போலீஸ் இன்ஸ்பெக்டர் ஆனந்த் தலைமையில் ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.


Next Story