பாறைக் கோவில் முருகன் ஆலயம்


பாறைக் கோவில் முருகன் ஆலயம்
x

சேலம் மாவட்டம் கூளையூர் மாதையன் நகர் அருகில் முருகன் நகரில் உள்ளது பாறைக்கோவில் முருகன் ஆலயம். காட்டுப்பகுதியில் அமைந்துள்ள இந்த ஆலயம், பாறைகளின் மீது அமைக்கப்பட்டுள்ளதால் ‘பாறைக்கோவில் முருகன் ஆலயம்' என அழைக்கப்படுகிறது.

இவ்வாலயத்தின் முன் உள்ள தொட்டி யில் தண்ணீர் குடிக்க விலங்குகள், பறவைகள் போன்றவை வரும். இக்காட்டுப்பகுதியில் காட்டுப்பன்றி, மயில், முயல், குரங்கு போன்றவை உள்ளன. கோவிலுக்குச் செல்லும் வழியில் முன்பு இருந்த நிழல்தரக்கூடிய ஒரு பெரிய ஆலமரம் அகற்றப்பட்டு, ஆலயத்தை அடைவதற்காக மண்சாலை அமைக்கப்பட்டுள்ளது. பழமையான வழிபாட்டுத்தலமான இது, 50 ஆண்டுகளுக்கு முன்புதான் கோவிலாக கட்டமைக்கப்பட்டுள்ளது. இவ்வாலயத்தின் அருகில் பெருமாள் கோவில் இருக்கிறது. சிவலிங்கத்தின் மேல் பகுதியிலுள்ள கல் போன்ற பகுதியை பெருமாள் என்று காலங்காலமாக வழிபட்டு வருகிறார்கள்.


Next Story