இன்றைய ராசிபலன் மற்றும் முக்கிய நிகழ்வுகள்


இன்றைய ராசிபலன் மற்றும் முக்கிய நிகழ்வுகள்
x

படம் : வள்ளியூர் முருகப்பெருமான்

சங்கரன்கோவில் ஸ்ரீ கோமதியம்மன் புஷ்பப் பாவாடை தரிசனம். திருநெல்வேலி நெல்லையப்பர் கொலு தர்பார் காட்சி.

பஞ்சாங்கம்:

சோபகிருது ஆண்டு, கார்த்திகை-4 (திங்கட்கிழமை)

பிறை: வளர்பிறை

திதி: அஷ்டமி பின்னிரவு 3.33 மணி வரை பிறகு நவமி

நட்சத்திரம்: அவிட்டம் காலை 10.17 மணி வரை பிறகு சதயம்

யோகம்: சித்தயோகம்

ராகுகாலம்: காலை 7.30 மணி முதல் 9 மணி வரை

எமகண்டம்: காலை 10.30 மணி முதல் 12 மணி வரை

சூலம்: கிழக்கு

நல்ல நேரம்: காலை 6 மணி முதல் 7 மணி வரை மற்றும் மாலை 3 மணி முதல் 4 மணி வரை

இன்றைய முக்கிய நிகழ்வுகள்:

சங்கரன்கோவில் ஸ்ரீ கோமதியம்மன் புஷ்பப் பாவாடை தரிசனம். வள்ளியூர் முருகப்பெருமான் ஏக சிம்மாசனத்தில் பவனி. பழனி ஆண்டவர் பவனி. சுவாமிமலை முருகப் பெருமான் பூத வாகனத்தில் வீதி உலா. திருநெல்வேலி நெல்லையப்பர் கொலு தர்பார் காட்சி. சிக்கல் சிங்கர வேலவர் வள்ளிதேவியை மணந்து இந்திர விமானத்தில் காட்சியருளல். கீழ்த்திருப்பதி ஸ்ரீ கோவிந்தராஜப் பெருமாள் சந்நிதியில் ஸ்ரீ கருடாழ்வாருக்கு திருமஞ்சன சேவை. திருமயிலை கற்பகாம்பாள் சமேத கபாலீசுவரர், திருவான்மியூர் திரிபுர சுந்தரியம்பாள் சமேத மருந்தீசுவரர், பெசன்ட் நகர் அராளகேசியம்பாள் சமேத ரத்தினகிரீசுவரர் சுவாமிக்கு காலையில் சோமவார அபிஷேகம்.

இன்றைய ராசிபலன்:

மேஷம் - திருமண வரன்கள் வாயில் தேடி வரும். வரவு திருப்தி தரும். உத்தியோகத்தில் மேலதிகாரிகளின் அனுகூலம் கிடைக்கும். மதிப்பும், மரியாதையும் உயரும். உறவினர்களின் உதவி உண்டு. வாழ்வில் வளர்ச்சி கூடும் நாள்.

ரிஷபம் - பிள்ளைகளின் சுப காரிய பேச்சுகள் முடிவாகும். துணிவும், தன்னம்பிக்கையும் கூடும். இடம் வாங்குவதில் ஆர்வம் காட்டுவீர்கள். வருமானம் திருப்தி தரும்.இல்லம் தேடி இனிய தகவல் வரும் நாள் இன்று.

மிதுனம் - கடன் சுமை குறையும். தொழிலில் எதிர்பார்த்த லாபம் உண்டு. நல்லவர்களின் தொடர்பு நீடிக்கும். பதவியில் உள்ளவர்களின் உதவி கிடைக்கும். மதியத்திற்கு மேல் எதிர்பார்ப்புகள் நிறைவேறும் நாள்.

கடகம் - வீண் விரயங்கள் அதிகரிக்கும். வீடு மாற்றங்கள் வரலாம். கூட்டாளிகள் குழப்பத்தை உருவாக்குவர். உத்தியோகத்தில் மேலதிகாரிகள் கேட்ட சலுகைகளை தர மறுப்பர். எதிரிகளின் பலம் கூடும் நாள்.

சிம்மம் - புதிய பாதை புலப்படும். நேற்று பாதியில் நின்ற பணியை இன்று வெற்றிகரமாக முடிப்பீர்கள். வீட்டை பராமரிப்பதில் ஆர்வம் கூடும். உத்தியோக பிரச்சினை அகலும். பொதுவாழ்வில் புகழ் கூடும்நாள்.

கன்னி - நாள்பட்ட நோய் அகலும். வீண் செலவுகள் குறையும். தொழில் ரீதியாக எடுத்த புதுமுயற்சி வெற்றி பெறும். எதிரிகள் விலகுவர். எந்த செயலையும் எளிதில் செய்து முடிப்பீர்கள். தொழில் வளர்ச்சி உண்டு. நட்பு வட்டம் விரிவடையும் நாள்.

துலாம் - வீடு வாங்குவது பற்றி யோசிப்பீர்கள். பணப்புழக்கம் அதிகரிக்கும். பிறர் வியக்கும் அளவு செயல் ஓன்றை உத்தியோகத்தில் செய்து காட்டுவீர்கள். விலை உயர்ந்த பொருட்களை வாங்கி மகிழும் நாள்.

விருச்சிகம் - பயணங்களால் மகிழ்ச்சி உண்டு. தொட்ட காரியங்களில் வெற்றி கிடைக்கும். பழைய வாகனத்தை கொடுத்துவிட்டு புதிய வாக னத்தை வாங்கும் யோகம் உண்டு. பணவரவு திருப்தி தரும் நாள்.

தனுசு - திடீர் பயணம் திகைக்க வைக்கும். சொத்துகளால் ஏற்பட்ட பிரச்சினை அகலும். உறவினர் வழியில் நல்ல தகவல் கிடைக்கும். கல்யாண முயற்சி கைகூடும். செல்வாக்கு அதிகரிக்கும் நாள்.

மகரம் - பணத்தேவைகள் உடனுக்குடன் பூர்த்தியாகும். பஞ்சாயத்துகள் சாதகமாகும். சொத்துகள் வாங்கும் யோகம் உண்டு. பெற்றோர் உடல்நலனில் கவனம் தேவை. தீட்டிய திட்டங்கள் வெற்றி பெறும் நாள்.

கும்பம் - செயல்பாடுகளில் வெற்றி கிடைக் கும். தொழில் வளர்ச்சி உண்டு. தொல்லை தந்த மேலதிகாரிகள் மாற்றப்படுவர். உங்கள் திறமைக்கு அங்கீகாரம் கிடைக்கும். உங்கள் செல்வாக்கு உயரும் நாள்.

மீனம் - பிரிந்து சென்றவர்கள் பிரியமுடன் வந்திணையும் நாள். கனிவாகப்பேசி காரியங்களை சாதித்துக் கொள்வீர்கள். உறவினர்கள் உங்கள் முன்னேற்றம் கண்டு வியப்பர்.

சந்திராஷ்டமம்: காலை 10.50 வரை மிதுனம்; பிறகு கடகம்.


Next Story