கட்டிட பராமரிப்பு- குறைபாடுகள் மற்றும் தீர்வு நடவடிக்கைகள்


கட்டிட பராமரிப்பு- குறைபாடுகள் மற்றும் தீர்வு நடவடிக்கைகள்
x

கட்டிட பராமரிப்பு என்பது கட்டிடத்தையும் கட்டிடத்தின் பல்வேறு கூறுகளையும் பாதுகாப்பதாகும்.

"கட்டிட பராமரிப்பு என்பது கட்டிடத்தையும் கட்டிடத்தின் பல்வேறு கூறுகளையும் பாதுகாப்பதாகும்.கட்டிடத்தின் முழு ஆயுள் காலத்திற்கும் தேவையான சேவை திறனை அளிக்கும் பொழுது கட்டிடம் எவ்விதக் குறைபாடும் இல்லாமல் பாதுகாக்கப்படுகின்றது. அப்படியே ஏதாவது குறைபாடு ஏற்பட்டாலும் அதற்குரிய தீர்வு நடவடிக்கைகளை எடுக்கும் பொழுது கட்டிடத்தின் ஆயுட்காலம் நீள்வதற்கான சாத்தியக்கூறுகள் அதிகமாகின்றது".

கட்டிட பராமரிப்பு சரிபார்ப்பு பட்டியல்

1.வழக்கமாக வீட்டை சுத்தம் செய்தல்.

2.குறைபாடுள்ள பிளாஸ்டரை சரிசெய்தல்.

3.விரிசல்களை சரிசெய்தல்.

4.தரையை சரிசெய்தல்.

5.சுவர்களுக்கு வண்ணம் தீட்டுதல்.

6.கதவு மற்றும் ஜன்னல்களுக்கு வண்ணம் தீட்டுதல்.

7.வடிகால் சுத்தம் செய்தல் மற்றும் சரி செய்தல்.

8.கரையான் எதிர்ப்பு சிகிச்சை.

9.குடிநீர் குழாய்களை சரி செய்தல்.

10.பழைய மின் சாதனங்களான சுவிட்ச்போர்டு, சுவிட்சுகள், டியூப் லைட்டுகள், வயரிங் போன்றவற்றை மாற்றுவது மற்றும் சரி செய்வது.

கட்டிடத்தில் ஏற்படும் குறைபாடுகள்

I. பிளாஸ்டரில் உள்ள குறைபாடுகள்

1. கொப்புளங்கள்(பிளிஸ்டரிங்)

2. விரிசல்

3.எஃப்ளோரசன்ஸ்

4. உதிர்தல்

5. பில்லிங்

தீர்வு நடவடிக்கைகள்

# கட்டுமான பணிகளின் தரத்தை மேம்படுத்துவது.

* கட்டுமானத்தில் உயர்தர செங்கற்களைப் பயன்படுத்துவது.

* ப்ளாஸ்டெரிங் செய்வதற்கு உப்பு நீரைப் பயன்படுத்துவதைத் தவிர்ப்பது.

* ப்ளாஸ்டெரிங் வேலையைத் தொடங்குவதற்கு முன் செங்கலில் இருந்து எஃப்ளோரசன்ஸ் அகற்றப்படுவது.

* ஈரமாக இருக்கும் செங்கற்களை சுவர் கட்டுமானத்திற்கு பயன்படுத்துவது.

# ப்ளாஸ்டெரிங் முடிந்த பிறகு ப்ளாஸ்டெரிங் மேற்பரப்பிற்கு தேவையான அளவு க்யூரிங் செய்வது.

II. கட்டிடத்தில் ஈரப்பதம்

நிலத்தில் இருந்து வரும் நீர் மற்றும் வெளிப்புற மேற்பரப்பிலிருந்து மழை போன்ற வடிவங்களில் வருகின்ற நீரே ஈரப்பதத்திற்கு முக்கிய காரணமாகும். சில சமயங்களில் மொட்டை மாடியின் தரை பரப்பு சரியாக அமைக்கப்படாததால் மழை நீர் அல்லது தெளிக்கும் நீர் அங்கு தேங்கி அது ஸ்லாப்பில் ஊடுருவி வீட்டின் சீலிங்கில் ஈரப்பதத்தை ஏற்படுத்தும் மற்றொரு காரணமாகும்.இதனால் கட்டுமானத்தில் பயன்படுத்தப்படும் மரங்கள் சேதம் அடைவதுடன் பிளாஸ்டரிங் வேலையும் சேதம்அடைகின்றது.

இதுமட்டுமல்லாமல் வீட்டின் தரைக்கு அமைக்கப்படும் மார்பில் மற்றும் டைல்களும் சேதமடைகின்றன.

தீர்வு நடவடிக்கைகள்

* நிலத்தடி நீரை பாதுகாக்க டிபிசி வேலை நல்ல தரமான கான்கிரீட் மூலம் செய்யப்படுவது.

* நிலத்தடி நீரை பாதுகாக்க பிடுமன் அல்லது நிலக்கீல் பீட மட்டத்தில் பயன்படுத்தப்படுவது.

* ஹாலோ பிரிக்ஸ் மேசனரி மழைநீரைப் பாதுகாக்க பயனுள்ளதாக இருக்கும்.

III. கரையான் தாக்குதல்

மரத்தின் மிகப்பெரிய எதிரி என்று கரையான்களைச் சொல்லலாம். கரையான்கள் மரத்தை அதிக அளவில் சிதைக்கின்றது.எனவே கட்டிடத்தை கரையான்களிடமிருந்து பாதுகாக்க தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்வது அவசியமாகும்.

தீர்வு நடவடிக்கைகள்

1. கட்டுமான தளத்தில் இருக்கும் மண்ணிற்கு அளிக்கும் சிகிச்சை - சந்தையில் கிடைக்கும் கரையான் எதிர்ப்பு ரசாயனங்கள் மூலம் மண் சுத்திகரிப்பு செய்யப்படுகிறது.ரசாயனத்தை தண்ணீரில் கரைத்து பீட மட்டத்தில் மண்ணில் தெளிக்கப்படுகிறது.

2. கட்டுமானத்திற்குப் பிறகு கட்டிடத்திற்கு அளிக்கப்படும் சிகிச்சை - உட்செலுத்துதல் முறையில் வீட்டின் தரைக்கு அளிக்கப்படும் சிகிச்சை.மரத்தின் மீது ரசாயனத்தை தெளிப்பது.கதவு மற்றும் ஜன்னல் சட்டங்களின் மீது ரசாயனத்தைத் தடவுவது.

IV. மொட்டை மாடியில் கசிவு

மொட்டை மாடியில் தண்ணீர் தேங்கினால், மாடியின் தரைத் தளத்தை முறையாக சமன் செய்ய வேண்டும். மாடியின் தரை தளத்தில் நீர்க்கசிவு ஏற்படாதவாறு நீர் காப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.கசிவு ஏற்படுகின்ற குழாய்களை சரி செய்ய வேண்டும்.

தரையை பழுதுபார்த்தல்

தரையின் சில பகுதிகள் சேதம் அடைந்திருந்தால் அந்தப் பகுதியை முழுமையாக அகற்றி, அதன் பின்னர் தரை அமைப்பு வேலையை சரிவர செய்ய வேண்டும்.தரைத் தளத்தை அமைப்பதற்கு பயன்படுத்தப்படும் கலவை சரியாக இருப்பதுடன் தரையை அமைத்த பிறகு அதற்கு விடும் நீரின் அளவும் முறையாக இருக்க வேண்டும்.

கட்டிட பராமரிப்பின் முக்கியத்துவம்

மழை, காற்று மற்றும் ஈரப்பதம் போன்ற வானிலை விளைவுகளால், வெப்பநிலை மற்றும் கட்டிடத்தின் ஆயுட்காலம் குறைகிறது. எனவே கட்டிடப் பராமரிப்பு என்பது அவசியமான ஒன்றாக இருக்கின்றது.

கட்டிடத்தின் முழு ஆயுள் காலத்திற்கும் நல்ல சேவையை வழங்க, பராமரிப்பு பணிகள் தேவையான ஒன்றாகும்.

தினசரி பயன்பாட்டினால் கட்டிடத்தில் ஏற்படுகின்ற சேதத்தை பாதுகாக்க பராமரிப்பு தேவைப்படுகிறது.

கட்டிடத்தின் பலவீனமான பகுதிக்கு வலிமையை வழங்கவும்,கட்டிடத்தின் தோற்றத்தை பராமரிக்கவும்,கட்டடங்களில் ஏற்படும் குறைபாடுகளால் ஏற்படும் விபத்துகளை ஏற்படாமல் தடுக்கவும் கட்டிட பராமரிப்பு முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகின்றது.

பராமரிப்பு வகைகள்

* தடுப்பு பராமரிப்பு : கட்டிடத்தின் சிதைவைக் குறைக்க எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் தடுப்பு பராமரிப்பு எனப்படும்.இது மேலும் 4 வகைகளாக பிரிக்கப்பட்டுள்ளது.அவை வழக்கமான பராமரிப்பு

அவ்வப்போது வழங்கப்படும் பராமரிப்பு

பருவமழைக்கு முந்தைய பராமரிப்பு

பருவமழைக்குப் பிந்தைய பராமரிப்பு

*நிவாரண பராமரிப்பு : கட்டிடத்தின் பாகம் சேதமடைந்த பிறகு செய்யப்படும் பராமரிப்பு நிவாரண(ரெமிடியல்) பராமரிப்பு என்று அழைக்கப்படுகிறது.


Next Story