மேன்ஹோல் அமைப்பதின் நோக்கம் மற்றும் வகைகள்


மேன்ஹோல் அமைப்பதின் நோக்கம் மற்றும் வகைகள்
x

கழிவுநீர் பாதையில் உள்ள அடைப்புகளை அகற்றுவதற்காக தொழிலாளர்கள் உபயோகப்படுத்தும் அணுகல் புள்ளியாக மேன்ஹோல் என்பது வரையறுக்கப்படுகிறது.இது கழிவுநீர் பாதையின் மிக முக்கியமான அங்கமாகும்.இதனால் கழிவுநீர் பாதைகளில் பிரச்சனை ஏற்படும் பொழுது அவற்றை தோண்டும் செயல் முறை முற்றிலுமாக நீக்கப்படுகிறது மற்றும் இது ஒரு ஆய்வு அறை அல்லது அலகு என்றும் அழைக்கப்படுகிறது.

இப்பொழுது இந்த மேன்ஹோலின் வழியாக குப்பைகளை அகற்றும் கருவிகளைச் செலுத்தி கழிவுநீர் பாதையில் ஏற்பட்டிருக்கும் அடைப்புகளை நீக்கும் முறை செயல்படுத்தப்பட்டு வருகின்றது. வீடுகளிலும் பல இடங்களில் இதுபோன்ற மேன்ஹோல்களை வைத்து அனைத்து கழிவு நீர் குழாய்களையும் இணைத்து இருப்பதைப் பார்க்க முடியும்.

மேன்ஹோலின் நோக்கம்

மேன்ஹோல் கட்டுமானத்தின் முக்கிய நோக்கம் சாக்கடை அமைப்பிற்கான மறுசீரமைப்பு, வடிகால் அமைப்பை ஆய்வு செய்தல்,அடைப்பை சுத்தம் செய்தல் மற்றும் பராமரிப்பு ஆகும்.மேலும் இது உள்ளே உள்ள கழிவுநீர் பாதையில் நுழைந்து சிக்கலைக் கண்டறிவதற்கான ஆரம்ப கட்டமாகும்.இதனால் கழிவுநீர் பாதையில் சேதமடைந்த குழாயை தோண்டும் வேலையின்றி மாற்றுவதற்கு இவை உதவுகின்றன. பிரதான கழிவுநீர் பாதை அல்லது டிரைனேஜ் பாயிண்ட் முடியும் வரை சீரான இடைவெளியில் கழிவுநீர் பாதை முழுவதும் மேன்ஹோல்கள் வைக்கப்படுகின்றன.பொதுவாக,மேன்ஹோல் என்பது ஆய்வுப் புள்ளியை அடையப் பயன்படும் வெவ்வேறு அளவுகள் மற்றும் ஆழங்களைக் கொண்ட செங்குத்து வட்ட அறையைக் கொண்டுள்ளது.மேன்ஹோல் மூடிகள் வெவ்வேறு அளவு, பொருள் மற்றும் செவ்வக, வட்ட மற்றும் சதுர வடிவிலும் கிடைக்கின்றன.

மேன்ஹோல் வகைகள்

1.ஆழமற்ற மேன் ஹோல்(ஷேலோ மேன் ஹோல்) : ஒரு கிளை கழிவுநீர் பாதையின் தொடக்கத்தில் ஒரு ஆழமற்ற மேன்ஹோல் கட்டப்படுகின்றது மற்றும் அதிக போக்குவரத்து இல்லாத இடங்களில் அது 75 முதல் 90 செ.மீ வரை ஆழம் கொண்டதாக இருக்கின்றது.

2.ஆழமான மேன் ஹோல்(டீப் மேன் ஹோல்) : ஒரு ஆழமான மேன்ஹோல் 150 செமீக்கு மேல் அதன் மேல் மேற்பரப்பில் ஒரு கனமான மூடியுடன் அமைக்கப்படுகின்றது.மேலும், கீழே இறங்குவதற்கான வசதி அதிகரிக்கப்படுவதைப் போலவே மேன் ஹோலின் ஆழமும் அதிகரிக்கப்பட்டுள்ளது.

3.சாதாரண மேன் ஹோல்(நார்மல் மேன் ஹோல்) : மேற்பரப்பில் ஒரு கனமான மூடியுடன் சதுர வடிவில் இருக்கும் ஒரு சாதாரண மேன்ஹோல் 150 செமீ ஆழம் கொண்டது.

மேன்ஹோலின் பகுதிகள்

ஆக்சஸ் ஷேஃப்ட்

வேலை செய்யும் அறை

அடிப்படை மற்றும் பக்கச்சுவர்

பாட்டம் அல்லது இன்வர்ட்

ஏணி அல்லது படிகள்

கவர் மற்றும் சட்டம்

மேன்ஹோல் கட்டுமானத்திற்கு பயன்படுத்தப்படும் பொருட்கள்

1.பிளாஸ்டிக் மேன்ஹோல் - பிளாஸ்டிக் மேன்ஹோல்கள் பாலிஎதிலின் பொருட்களைப் பயன்படுத்தி தயாரிக்கப்படுகின்றன. இது சுற்றுச்சூழலுக்கு உகந்தது,நிலையானது மற்றும் அது வைக்கப்படும் மண்ணையோ அல்லது தரையையோ பாதிக்காது.பிளாஸ்டிக் மேன்ஹோல்களைப் பயன்படுத்துவதன் முக்கிய நன்மை என்னவென்றால்,அவற்றை அடிக்கடி சீரமைப்பது மற்றும் பராமரிப்பது என்ற பேச்சுக்கே இடமில்லை.

2.ப்ரி காஸ்ட் கான்கிரீட் மேன்ஹோல் - ஒரு பாரம்பரிய முறைப்படி உருவாக்கப்படும் மேன்ஹோல் இவையாகும். வேறு ஒரு இடத்தில் தயாரிக்கப்படும் இவற்றை தேவையான இடத்தில் கொண்டுவந்து நிறுவுவது மிகவும் எளிது.இவை பல ஆண்டுகள் நீடித்து உழைக்கக் கூடியதாக இருப்பதால் பிரபலமான மேன்ஹோல் என்று இவற்றைச் சொல்லலாம்.

3.கண்ணாடியிழை(ஃபைபர் கிளாஸ்) மேன்ஹோல் - கண்ணாடியிழை மேன்ஹோல் கிரைண்டர் சேனல், வயர்கள், மழைநீரைப் பிரிக்கும் அலகு போன்ற கூடுதல் அம்சங்களைக் கொண்டுள்ளது.இவற்றை தேவையான இடங்களில் வைப்பதும், கையாள்வதும் எளிது.கான்கிரீட் மேன்ஹோலை விட இதன் எடை மிகவும் குறைவு. மேலும், இது சுற்றுச்சூழல் நட்பு மற்றும் அதிக ஆயுட்காலம் கொண்டவையாக இருக்கின்றன.

மேன்ஹோல் மூடி( கவர்) வகைகள்

மேன்ஹோல் மூடி என்பது அவ்வப்போது திறந்து மூடக்கூடிய வகையில் வடிவமைக்கப்பட்டு வருகின்றது. பொதுவாக மேன்ஹோல் மூடி என்பது கான்கிரீட், வார்ப்பிரும்பு மற்றும் இரண்டின் கலவையால் ஆனது.இந்தப் பொருட்களைப் பயன்படுத்தி மேன்ஹோல் மூடிகள் தயாரிக்கப்படுவதன் நோக்கம் இவை மலிவானது, அதிக ஆண்டுகள் நீடித்து உழைக்க கூடியது மற்றும் கனமானது. நவீனமயமாக்கல் காரணமாக மேன்ஹோல் கவர்கள் கண்ணாடியிழை, பிளாஸ்டிக் மற்றும் கலவை போன்ற பல்வேறு பொருட்களில் செய்யப்பட்டுவிற்பனை செய்யப்படுகின்றன.

1.டக்டைல் அயன் கவர் - டக்டைல் இரும்பு மற்றும் நோட்யுலர் இரும்பினால் இவ்வகை மூடிகள் தயாரிக்கப்படுகின்றன.இந்த வகை கவர் அதன் வலிமை, திடத்தன்மை, ஆயுள் மற்றும் மீள்தன்மை அம்சங்களால் மிகவும் பிரபலமானது.இதன் மற்றொரு சிறப்பம்சம் இது எளிதில் துருப்பிடிக்காது.

2.ரெசஸ்டு மேன்ஹோல் கவர் - பாதசாரிகள் நடக்கக் கூடிய இடங்களில் அழகிய தோற்றத்தைத் தருவதற்காக பேவர் பிளாக், சிமெண்ட் மற்றும் ஸ்க்ரீட் போன்றவற்றை பதிக்கிறார்கள். இதுபோன்ற இடங்களில் வைப்பதற்கான அழகிய மேன்ஹோல் மூடியாக இவற்றை பயன்படுத்துகிறார்கள். இந்த வகையான மேன்ஹோல் கவர்கள் பணிமனை, மருத்துவமனை,வீடுகளின் உட்புறம் மற்றும் அடுக்குமாடி குடியிருப்புகளின் தோட்டப் பகுதி போன்ற இடங்களில் உட்புறத்தில் பயன்படுத்தப்படும் மேன்ஹோல்களுக்கு மிகவும் பொருத்தமானவை ஆகும்.

3.சாலிட் டாப் கவர் - சாலிட் டாப் மேன்ஹோல் கவர் இலகுவான கால்வனேற்றப்பட்ட பொருட்களால் ஆனது மற்றும் தரையின் மேற்புறத்தில் தெரியும்படி வடிவமைக்கப்பட்டுள்ளது.


Next Story