உலகக்கோப்பை இறுதிப்போட்டியில் இந்தியா தோல்வி: 2 ரசிகர்கள் தற்கொலை


உலகக்கோப்பை இறுதிப்போட்டியில் இந்தியா தோல்வி: 2 ரசிகர்கள் தற்கொலை
x

உலகக்கோப்பை இறுதிப்போட்டியில் இந்தியாவை வீழ்த்தி ஆஸ்திரேலியா அபார வெற்றிபெற்றது.

கொல்கத்தா,

உலகக்கோப்பை கிரிக்கெட் இறுதிப்போட்டி நேற்று முன் தினம் நடைபெற்றது. இப்போட்டியில் இந்தியா - ஆஸ்திரேலியா மோதின. இதில், இந்தியாவை 6 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி ஆஸ்திரேலியா சாம்பியன் பட்டம் வென்றது.

உலகக்கோப்பை இறுதிப்போட்டியில் இந்தியா தோல்வியடைந்ததால் இந்திய ரசிகர்கள் மிகுந்த வேதனையடைந்துள்ளனர்.

இந்நிலையில், உலகக்கோப்பை இறுதிப்போட்டியில் இந்தியா தோல்வியடைந்ததை தாங்கிக்கொள்ளமுடியாத 2 ரசிகர்கள் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மேற்குவங்காள மாநிலம் பெங்குரா பக்குதியை சேர்ந்தவர் ராகுல் லோகர் (23). இவர் கடந்த ஞாயிற்றுக்கிழமை உலகக்கோப்பை இறுதிப்போட்டியை டிவியில் பார்த்துள்ளார். போட்டியில் இந்தியா தோல்வியடைந்ததை ஏற்றுக்கொள்ள முடியாத ராகுல் தனது அறையில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளார்.

அதேபோல், ஒடிசா மாநிலம் ஜெய்ஜ்பூர் பகுதியை சேர்ந்தவர் தேவ் ராஜன் தாஸ் (வயது 23). இவர் கடந்த ஞாயிற்றுக்கிழமை உலகக்கோப்பை இறுதிப்போட்டியை டிவியில் பார்த்துள்ளார். இறுதிப்போட்டியில் இந்தியா தோல்வியடைந்த நிலையில் மிகுந்த மன உளைச்சலில் இருந்த தேவ் ராஜன் தாஸ் இரவு வீட்டின் மொட்டைமாடியில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். தற்கொலை செய்துகொண்ட தேவ் ராஜன் தாஸ் மனநல பிரச்சினை தொடர்பாக சிகிச்சை பெற்று வந்தார். இந்த இரு சம்பவங்கள் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story