'ரெட் பால், ஒயிட் பால் ஒப்பீடு வேண்டாம்...' ஹர்ஷா போக்ளேவின் கேள்விக்கு காட்டமாக பதிலளித்த ரிஷப் பண்ட்


ரெட் பால், ஒயிட் பால் ஒப்பீடு வேண்டாம்... ஹர்ஷா போக்ளேவின் கேள்விக்கு காட்டமாக பதிலளித்த ரிஷப் பண்ட்
x

ஒப்பீடு செய்வதாக இருந்தால் 30 வயதுக்கு மேல் ஒப்பீடு செய்து கொள்ளுங்கள் என்று ரிஷப் பண்ட் கூறினார்.

மும்பை,

கிரிக்கெட் விமர்சகர் ஹர்ஷா போக்ளே, இந்திய வீரர் ரிஷப் பண்ட்டிடம் நடத்திய நேர்காணலில், ரெட் பால் மற்றும் ஒயிட் பால் போட்டிகளில் அவரது பேட்டிங் ஒப்பீடு குறித்து கேள்வியை முன்வைத்தார்.

இதனால் அதிருப்தி அடைந்த ரிஷப் பண்ட், ஒப்பிட்டு பேசுவதை என்றும் தான் விரும்புவதில்லை என்றும், ஒயிட் பால் கிரிக்கெட்டில் அவ்வளவு மோசமாக ஒன்றும் தான் விளையாடவில்லை என்றும் காட்டமாக பதிலளித்தார்.

மேலும் தனக்கு 25 வயதே ஆவதாக குறிப்பிட்ட ரிஷப் பண்ட், அவ்வாறு ஒப்பீடு செய்வதாக இருந்தால் 30 வயதுக்கு மேல் ஒப்பீடு செய்து கொள்ளுங்கள் என்றும், அதுவரை விமர்சனங்களை கண்டு கொள்ளப் போவதில்லை என்றும் தெரிவித்தார்.


Next Story