ருத்ரதாண்டவமாடிய ருதுராஜ் ஒரு ஓவரில் 7 சிக்சர்கள் அடித்து சாதனை


ருத்ரதாண்டவமாடிய ருதுராஜ் ஒரு ஓவரில் 7 சிக்சர்கள் அடித்து சாதனை
x
தினத்தந்தி 28 Nov 2022 8:21 AM GMT (Updated: 2022-11-28T15:04:05+05:30)

49-வது ஓவரில் ஏழு சிக்ஸர்களை விளாசி யாரும் படைக்காத புதிய சாதனையை ருதுராஜ் படைத்தார்.

மும்பை

விஜய் ஹசாரே டிராபி 2022 தொடரின் இன்றைய போட்டியில் உத்தரப் பிரதேசம் - மராட்டிய அணிகள் மோதின. இந்த போட்டி அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி ஸ்டேடியம் பி மைதானத்தில் நடந்தது.

அதன்படி மராட்டிய அணி களமிறங்கியது. 50 ஓவர் முடிவில் 5 விக்கெட்டுகளை இழந்து 330 ரன்கள் குவித்தது. அதிக பட்சமாக அணியின் தொடக்க வீரரும் கேப்டனுமான ருதுராஜ் கெய்க்வாட் 159 பந்தில் 220 ரன்கள் குவித்தார். லிஸ்ட் ஏ கிரிக்கெட்டில் இது அவரது முதல் இரட்டைச் சதம் ஆகும்.

இந்த போட்டியின் 49-வது ஓவரில் ஏழு சிக்ஸர்களை விளாசி யாரும் படைக்காத புதிய சாதனையை ருதுராஜ் படைத்தார். அந்த ஓவரை உத்தரப் பிரதேச அணியின் சிவா சிங் வீசினார். நோ பால் உள்பட 7 பந்துகளில் 43 ரன்கள் அடித்து சாதனை படைத்தார்.
Next Story