மகளிர் முத்தரப்பு கிரிக்கெட் தொடர் - வெஸ்ட் இண்டீஸ் அணியை வீழ்த்தி இந்தியா வெற்றி


மகளிர் முத்தரப்பு கிரிக்கெட் தொடர் - வெஸ்ட் இண்டீஸ் அணியை வீழ்த்தி இந்தியா வெற்றி
x

இதில் நேற்று நடந்த போட்டியில் இந்தியா - வெஸ்ட் இண்டீஸ் அணிகள் மோதின

இந்தியா, தென் ஆப்பிரிக்கா, வெஸ்ட் இண்டீஸ் ஆகிய 3 நாடுகள் பங்கேற்கும் மகளிர் முத்தரப்பு 20 ஓவர் கிரிக்கெட் போட்டி தென் ஆப்பிரிக்காவில் நடைபெறுகிறது.

இதில் நேற்று நடந்த போட்டியில் இந்தியா - வெஸ்ட் இண்டீஸ் அணிகள் மோதின.முதலில் பேட்டிங் செய்த வெஸ்ட் இண்டீஸ் அணி, 20 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 94 ரன்கள் மட்டுமே எடுத்தது. அந்த அணியில் கேப்டன் ஹேலி மேத்யூஸ் அதிகபட்சமாக 34 ரன்கள் எடுத்தார். இந்தியா சார்பில் தீப்தி சர்மா அபாரமாகப் பந்துவீசி 3 விக்கெட்டுகளை எடுத்தார்.

பின்னர் 96 ரன்கள் இலக்குடன் களமிறங்கிய இந்திய அணி 13.5 ஓவர்களில் 2 விக்கெட் இழப்புக்கு 95 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. ஜெமிமா 42 ரன்கள் ,கேப்டன் ஹர்மன்ப்ரீதி கவுர் 32 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார்கள்.

இந்த வெற்றியால் வியாழன் அன்று நடைபெறும் முத்தரப்புப் போட்டியின் இறுதிச்சுற்றில் இந்தியா - தென் ஆப்பிரிக்கா அணிகள் மோதவுள்ளன.


Next Story