ஐ.எஸ்.எல் கால்பந்து: கேரளாவை வீழ்த்தி கோவா அணி வெற்றி


ஐ.எஸ்.எல் கால்பந்து: கேரளாவை வீழ்த்தி கோவா அணி வெற்றி
x

image courtesy: Kerala Blasters FC twitter

இன்று நடைபெற்ற போட்டியில் எப்.சி கோவா-கேரளா பிளாஸ்டர்ஸ் அணிகள் மோதின.

கோவா,

11 அணிகளுக்கு இடையிலான 9-வது இந்தியன் சூப்பர் லீக் (ஐ.எஸ்.எல்.) கால்பந்து தொடர் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. இதில் கோவாவில் இன்று நடைபெற்ற போட்டியில் எப்.சி கோவா-கேரளா பிளாஸ்டர்ஸ் அணிகள் மோதின.

விறுவிறுப்பாக நடைபெற்ற இந்த போட்டியில் கோவா அணி சார்பில் இகெர் ஆட்டத்தின் 35-வது நிமிடத்தில் ஒரு கோல் அடித்தார். நோவா ஆட்டத்தின் 43-வது நிமிடத்திலும் ரிடீம் ஆட்டத்தின் 69-வது நிமிடத்திலும் தலா ஒரு கோல் அடித்தனர். கேரளா பிளாஸ்டர்ஸ் அணி சார்பில் திமித்ரியோஸ் ஆட்டத்தின் 51-வது நிமிடத்தில் ஒரு கோல் அடித்தார்.

இந்த நிலையில் ஆட்டநேர முடிவில் கோவா அணி 3-1 என்ற கோல் கணக்கில் கேரளாவை வீழ்த்தி வெற்றி பெற்றது.


Next Story