ஐ.எஸ்.எல் கால்பந்து: ஈஸ்ட் பெங்காலை வீழ்த்தி ஐதராபாத் வெற்றி


ஐ.எஸ்.எல் கால்பந்து: ஈஸ்ட் பெங்காலை வீழ்த்தி ஐதராபாத் வெற்றி
x

image courtesy: Indian Super League twitter

கொல்கத்தாவில் இன்று நடைபெற்ற போட்டியில் ஈஸ்ட் பெங்கால்-ஐதராபாத் அணிகள் மோதின.

கொல்கத்தா,

11 அணிகளுக்கு இடையிலான 9-வது இந்தியன் சூப்பர் லீக் (ஐ.எஸ்.எல்.) கால்பந்து தொடர் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. இதில் கொல்கத்தாவில் இன்று நடைபெற்ற போட்டியில் ஈஸ்ட் பெங்கால்-ஐதராபாத் அணிகள் மோதின.

விறுவிறுப்பாக நடைபெற்ற இந்த போட்டியில் ஐதராபாத் அணி இரண்டு கோல்கள் அடித்தது. ஈஸ்ட் பெங்கால் அணி எந்த கோலும் அடிக்கவில்லை. ஐதராபாத் அணி சார்பில் ஜாவியர் சிவேரியோ ஆட்டத்தின் 9-வது நிமிடத்தில் ஒரு கோல் அடித்தார். டி சில்வா ஆட்டத்தின் 90+3 வது நிமிடத்தில் ஒரு கோல் அடித்தார்.

இறுதியில் ஆட்டநேர முடிவில் ஐதராபாத் அணி 2-0 என்ற கோல் கணக்கில் ஈஸ்ட் பெங்கால் அணியை வீழ்த்தி வெற்றி பெற்றது.


Next Story