ஐ.எஸ்.எல் கால்பந்து: நார்த் ஈஸ்ட் யுனைடெட் அணியை வீழ்த்தி கேரளா பிளாஸ்டர்ஸ் வெற்றி


ஐ.எஸ்.எல் கால்பந்து: நார்த் ஈஸ்ட் யுனைடெட் அணியை வீழ்த்தி கேரளா பிளாஸ்டர்ஸ் வெற்றி
x

image courtesy: NorthEast United FC twitter

கொச்சியில் இன்று நடைபெற்ற போட்டியில் நார்த் ஈஸ்ட் யுனைடெட்-கேரளா பிளாஸ்டர்ஸ் அணிகள் மோதின.

கொச்சி,

11 அணிகளுக்கு இடையிலான 9-வது இந்தியன் சூப்பர் லீக் (ஐ.எஸ்.எல்.) கால்பந்து தொடர் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. இதில் கொச்சியில் இன்று நடைபெற்ற போட்டியில் நார்த் ஈஸ்ட் யுனைடெட்-கேரளா பிளாஸ்டர்ஸ் அணிகள் மோதின.

விறுவிறுப்பாக நடைபெற்ற இந்த போட்டியில் கேரளா பிளாஸ்டர்ஸ் அணி சார்பில் திமித்ரியோஸ் ஆட்டத்தின் 42 மற்றும் 44-வது நிமிடம் என அடுத்தடுத்து இரண்டு கோல்கள் அடித்தார். நார்த் ஈஸ்ட் யுனைடெட் அணி எந்த கோலும் அடிக்கவில்லை.

இந்த நிலையில் ஆட்டநேர முடிவில் கேரளா பிளாஸ்டர்ஸ் அணி 2-0 என்ற கோல் கணக்கில் நார்த் ஈஸ்ட் யுனைடெட் அணியை வீழ்த்தி வெற்றி பெற்றது.


Next Story