ஐ.எஸ்.எல் கால்பந்து: நார்த் ஈஸ்ட் யுனைடெட் அணியை வீழ்த்தி மும்பை சிட்டி அபார வெற்றி


ஐ.எஸ்.எல் கால்பந்து: நார்த் ஈஸ்ட் யுனைடெட் அணியை வீழ்த்தி மும்பை சிட்டி அபார வெற்றி
x

image courtesy: Indian Super League twitter

இன்று நடைபெற்ற போட்டியில் மும்பை சிட்டி-நார்த் ஈஸ்ட் யுனைடெட் அணிகள் மோதின.

மும்பை,

11 அணிகளுக்கு இடையிலான 9-வது இந்தியன் சூப்பர் லீக் (ஐ.எஸ்.எல்.) கால்பந்து தொடர் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. இதில் மும்பையில் இன்று நடைபெற்ற போட்டியில் மும்பை சிட்டி-நார்த் ஈஸ்ட் யுனைடெட் அணிகள் மோதின.

விறுவிறுப்பாக நடைபெற்ற இந்த போட்டியில் மும்பை சிட்டி அணி நான்கு கோல்கள் அடித்தது. நார்த் ஈஸ்ட் யுனைடெட் அணி எந்த கோலும் அடிக்கவில்லை.

மும்பை சிட்டி அணி சார்பில் அகமது ஆட்டத்தின் 5-வது நிமிடத்திலும் ஜார்ஜ் ஆட்டத்தின் 11-வது நிமிடத்திலும் தலா ஒரு கோல் அடித்தனர். மேலும் கிரெக் ஸ்டீவர்ட் ஆட்டத்தின் 15-வது நிமிடத்திலும் வினித் ராய் ஆட்டத்தின் 45-வது நிமிடத்திலும் தலா ஒரு கோல் அடித்தனர்.

இறுதியில் ஆட்டநேர முடிவில் மும்பை சிட்டி அணி 4-0 என்ற கோல் கணக்கில் நார்த் ஈஸ்ட் யுனைடெட் அணியை வீழ்த்தி அபார வெற்றி பெற்றது.


Next Story