ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான ஆக்கி தொடர்: முதல் ஆட்டத்தில் இந்திய பெண்கள் அணி தோல்வி


ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான ஆக்கி தொடர்: முதல் ஆட்டத்தில் இந்திய பெண்கள் அணி தோல்வி
x

இந்தியா-ஆஸ்திரேலியா பெண்கள் ஆக்கி அணிகள் இடையிலான முதலாவது ஆட்டம் அடிலெய்டில் நேற்று நடந்தது.

அடிலெய்டு,

ஆசிய விளையாட்டு போட்டிக்கு தயாராகும் பொருட்டு இந்திய பெண்கள் ஆக்கி அணி, ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் செய்து அந்த நாட்டு அணிக்கு எதிராக 3 ஆட்டங்கள் கொண்ட தொடரில் ஆடுகிறது. இதில் இந்தியா-ஆஸ்திரேலியா பெண்கள் ஆக்கி அணிகள் இடையிலான முதலாவது ஆட்டம் அடிலெய்டில் நேற்று நடந்தது.

பரபரப்பாக அரங்கேறிய இந்த ஆட்டத்தில் உலக தரவரிசையில் 3-வது இடத்தில் இருக்கும் ஆஸ்திரேலிய அணி 4-2 என்ற கோல் கணக்கில் தரவரிசையில் 8-வது இடத்தில் உள்ள இந்தியாவை வீழ்த்தியது. ஆஸ்திரேலிய அணியில் ஐஸ்லிங் உட்ரி 21-வது நிமிடத்திலும், மாட்டி பிட்ஸ்பாட்ரிக் 27-வது நிமிடத்திலும், அலிஸ் அர்னோட் 32-வது நிமிடத்திலும், கோர்ட்னி ஸ்கோனெல் 35-வது நிமிடத்திலும் கோல் அடித்தனர். இந்திய அணி தரப்பில் சஞ்சிதா குமாரி (29-வது நிமிடம்), ஷர்மிளா தேவி (40-வது நிமிடம்) தலா ஒரு கோல் திருப்பினர். இவ்விரு அணிகள் இடையிலான 2-வது போட்டி இதே மைதானத்தில் நாளை (சனிக்கிழமை) நடக்கிறது.


Next Story