ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஆக்கி: இந்திய பெண்கள் அணி ஆறுதல் வெற்றி


ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஆக்கி: இந்திய பெண்கள் அணி ஆறுதல் வெற்றி
x

image courtesy: HI Media via ANI

இந்தியா-ஆஸ்திரேலியா ‘ஏ’ பெண்கள் அணிகள் இடையிலான 2-வது மற்றும் கடைசி ஆட்டம் அடிலெய்டில் நேற்று நடந்தது.

அடிலெய்டு,

ஆசிய விளையாட்டு போட்டிக்கு தயாராகும் பொருட்டு இந்திய பெண்கள் ஆக்கி அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் செய்து அந்த நாட்டு அணிக்கு எதிராக விளையாடி வருகிறது. இதில் இந்தியா-ஆஸ்திரேலியா 'ஏ' பெண்கள் அணிகள் இடையிலான 2-வது மற்றும் கடைசி ஆட்டம் அடிலெய்டில் நேற்று நடந்தது.

பரபரப்பாக அரங்கேறிய இந்த ஆட்டத்தில் இந்தியா 2-1 என்ற கோல் கணக்கில் ஆஸ்திரேலியா 'ஏ' அணியை வென்றது. இந்திய அணியில் நவ்னீத் கவுர் 10-வது நிமிடத்திலும், தீப் கிரேஸ் எக்கா 25-வது நிமிடத்திலும் கோல் அடித்தனர். ஆஸ்திரேலிய 'ஏ' அணி தரப்பில் அபிகைல் வில்சன் 22-வது நிமிடத்தில் பதில் கோல் திருப்பினார்.

ஆஸ்திரேலிய தொடரில் இந்திய அணி பெற்ற ஆறுதல் வெற்றி இதுவாகும். ஏற்கனவே நடந்த ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான 3 ஆட்டங்களில் முதல் இரண்டில் தோல்வியும், 3-வது ஆட்டத்தில் டிராவும் கண்டு இருந்த இந்திய அணி, ஆஸ்திரேலிய 'ஏ' அணிக்கு எதிரான முதலாவது ஆட்டத்திலும் தோற்று இருந்தது குறிப்பிடத்தக்கது.


Next Story