ஜூனியர் ஆசிய கோப்பை ஆக்கி: இந்தியா- பாகிஸ்தான் ஆட்டம் 'டிரா'


ஜூனியர் ஆசிய கோப்பை ஆக்கி: இந்தியா- பாகிஸ்தான் ஆட்டம் டிரா
x

image courtesy: Hockey India via ANI

10 அணிகள் பங்கேற்றுள்ள 10-வது ஜூனியர் ஆசிய கோப்பை ஆக்கி போட்டி ஓமனின் சலாலா நகரில் நடந்து வருகிறது.

சலாலா,

10 அணிகள் பங்கேற்றுள்ள 10-வது ஜூனியர் ஆசிய கோப்பை ஆக்கி போட்டி ஓமனின் சலாலா நகரில் நடந்து வருகிறது. இதில் 'ஏ' பிரிவில் அங்கம் வகிக்கும் நடப்பு சாம்பியனான இந்திய அணி நேற்று முன்தினம் இரவு பாகிஸ்தானை எதிர்கொண்டது.

விறுவிறுப்பான இந்த ஆட்டம் 1-1 என்ற கோல் கணக்கில் டிராவில் முடிந்தது. இந்திய அணியில் ஷர்தா நந்த் திவாரி 24-வது நிமிடத்திலும், பாகிஸ்தான் தரப்பில் பஷாரத் அலி 44-வது நிமிடத்திலும் கோல் போட்டனர். 2 வெற்றி, ஒரு டிரா என்று 7 புள்ளிகளுடன் தனது பிரிவில் 2-வது இடத்தில் உள்ள இந்திய அணி தனது கடைசி லீக்கில் தாய்லாந்தை எதிர்கொள்கிறது.


Next Story