சென்னையில் நடைபெற்ற இலவச கைப்பந்து பயிற்சி முகாம் நிறைவு


சென்னையில் நடைபெற்ற இலவச கைப்பந்து பயிற்சி முகாம் நிறைவு
x

பயிற்சி முகாமில் 150 மாணவ, மாணவிகளுக்கு சிறந்த பயிற்சியாளர் மூலம் பயிற்சி அளிக்கப்பட்டது.

சென்னை,

நெல்லை பிரண்ட்ஸ் கிளப் மற்றும் டாக்டர் சிவந்தி கைப்பந்து கிளப் சார்பில் 39-வது கோடை கால இலவச கைப்பந்து பயிற்சி முகாம் சென்னை எழும்பூரில் உள்ள மேயர் ராதாகிருஷ்ணன் ஸ்டேடியத்தில் கடந்த 1-ந்தேதி தொடங்கியது. இதில் 150 மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர். அவர்களுக்கு சிறந்த பயிற்சியாளர் மூலம் பயிற்சி அளிக்கப்பட்டது.

இந்த முகாம் நேற்று நிறைவடைந்தது. நிறைவு விழாவில் தமிழ்நாடு கைப்பந்து சங்க ஆயுட்கால தலைவர் ஆர்.அர்ஜூன்துரை, இணைச்செயலாளர் மகேந்திரன், அகர்வால் அறக்கட்டளை சேர்மன் எஸ்.சி.அகர்வால், மூத்த வழக்கறிஞர் தங்கசிவன் ஆகியோர் கலந்து கொண்டு பயிற்சி பெற்ற மாணவர்களுக்கு சான்றிதழ் வழங்கினர். இதற்கான ஏற்பாடுகளை முகாம் ஒருங்கிணைப்பு கமிட்டியினர் ஏ.தினகர், பி.ெஜகதீசன் ஆகியோர் செய்திருந்தனர்.


Next Story