மாநில பள்ளி கைப்பந்து: சென்னை அணிகள் 'சாம்பியன்'


மாநில பள்ளி கைப்பந்து: சென்னை அணிகள் சாம்பியன்
x

மாநில பள்ளி கைப்பந்து போட்டியில் சென்னை அணிகள் ‘சாம்பியன்’ பட்டத்தை வென்றது.

சென்னை,

சென்னை மாவட்ட கைப்பந்து சங்கம் சார்பில் மாநில பள்ளி மற்றும் கல்லூரிகள் இடையிலான கைப்பந்து சாம்பியன்ஷிப் போட்டி சென்னை எழும்பூரில் உள்ள மேயர் ராதாகிருஷ்ணன் ஸ்டேடியத்தில் நடந்து வருகிறது. இதில் பள்ளி அணிகளுக்கான ஆண்கள் பிரிவில் நேற்று மாலை நடந்த இறுதிப்போட்டியில் செயின்ட் பீட்டர்ஸ் (சென்னை) அணி 23-25, 26-24, 25-17 என்ற செட் கணக்கில் செயின்ட் பீட்ஸ் (சென்னை) அணியை வீழ்த்தி சாம்பியன் பட்டத்தை தனதாக்கியது. முன்னதாக நடந்த 3-வது இடத்துக்கான ஆட்டத்தில் வேலுடையார் (திருவாரூர்) அணி 25-17, 25-22 என்ற நேர்செட்டில் டான்போஸ்கோவை (சென்னை) தோற்கடித்து 3-வது இடத்தை சொந்தமாக்கியது.

பெண்கள் பிரிவில் நடந்த இறுதிப்போட்டியில் ரோட்லெர் (சென்னை) அணி 25-18, 25-16 என்ற நேர்செட்டில் கலைமகள் (மயிலாடுதுறை) அணியை வென்று சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது. முன்னதாக நடந்த 3-வது இடத்துக்கான ஆட்டத்தில் குமுதா (ஈரோடு) அணி 25-22, 25-16 என்ற நேர்செட்டில் லேடி சிவசாமி (சென்னை) அணியை வீழ்த்தியது.

பரிசளிப்பு விழாவில் பள்ளி கல்வி துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கலந்து கொண்டு வெற்றி பெற்ற அணிகளுக்கு பரிசு வழங்கினார். பரந்தாமன் எம்.எல்.ஏ., தமிழ்நாடு தடகள சங்க தலைவர் டபிள்யூ.ஐ.தேவாரம், போட்டி அமைப்பு குழு சேர்மன் எஸ்.என்.ஜெயமுருகன், தலைவர் ஆர்.அர்ஜூன்துரை, துணை சேர்மன் ஆர்.வி.எம்.ஏ.ராஜன், துணைத்தலைவர் பி.ஜெகதீசன், இயக்குனர் ஏ.பழனியப்பன், செயலாளர் சி.ஸ்ரீகேசவன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.


Next Story