தாய்லாந்து ஓபன் பேட்மிண்டன்: சாத்விக்-சிராக், சாய்னா நேவால் அடுத்த சுற்றுக்கு முன்னேற்றம்


தாய்லாந்து ஓபன் பேட்மிண்டன்: சாத்விக்-சிராக், சாய்னா நேவால் அடுத்த சுற்றுக்கு முன்னேற்றம்
x

இந்திய முன்னணி வீராங்கனை சாய்னா நேவால் முதல் சுற்றில் கனடா வீராங்கனையை தோற்கடித்தார்.

பாங்காக்,

தாய்லாந்து ஓபன் சர்வதேச பேட்மிண்டன் போட்டி பாங்காங்கில் நேற்று முன்தினம் தொடங்கியது. இதில் பெண்கள் ஒற்றையர் பிரிவில் இந்திய முன்னணி வீராங்கனை சாய்னா நேவால் 21-13, 21-7 என்ற நேர் செட்டில் வென் யு ஜாங்கை (கனடா) பந்தாடினார். சாய்னா 2-வது சுற்றில் சீனாவின் ஹி பிங் ஜியாவை எதிர்கொள்கிறார்.

இந்தியாவின் அஷ்மிதா சாலிகா 21-17, 21-14 என்ற நேர் செட்டில் சக நாட்டவர் மாள்விகா பன்சோத்தை வீழ்த்தினார். அஷ்மிதா அடுத்து முன்னாள் ஒலிம்பிக் சாம்பியன் கரோலினா மரினுடன் (ஸ்பெயின்) மல்லுகட்டுகிறார்.

ஆண்கள் இரட்டையர் பிரிவில், காமன்வெல்த் விளையாட்டு சாம்பியனான இந்தியாவின் சாத்விக் சாய்ராஜ் ரங்கிரெட்டி- சிராக் ஷெட்டி ஜோடி 21-13, 18-21, 21-17 என்ற செட் கணக்கில் டென்மார்க்கின் ராஸ்மஸ் கிஜார்- பிரெடெரிக் சோகார்ட் இணையை சாய்த்தது.


Next Story