ஆல் இன் ஆல் மிக்சட் சப்ஜி


ஆல் இன் ஆல் மிக்சட் சப்ஜி
x
தினத்தந்தி 4 Dec 2022 1:30 AM GMT (Updated: 4 Dec 2022 1:30 AM GMT)

சுவையான சப்ஜி செய்முறைகளை இந்த தொகுப்பில் தெரிந்து கொள்வோம்

ஆல் இன் ஆல் மிக்சட் சப்ஜி

தேவையான பொருட்கள்:

கேரட், உருளைக்கிழங்கு, குடைமிளகாய்,

பீன்ஸ், காலிபிளவர், பச்சை பட்டாணி

(நறுக்கியது) - 2 கப்

காய்ந்த மிளகாய் - 5

தனியா - 1 டீஸ்பூன்

ஏலக்காய் - 2

கிராம்பு - 3

பட்டை - 2

சீரகம் - 1 டேபிள் ஸ்பூன்

சோம்பு - 1 டீஸ்பூன்

மிளகு - 1 டீஸ்பூன்

பிரியாணி இலை - 1

பெரிய வெங்காயம் - 3

தக்காளி - 3

இஞ்சி பூண்டு விழுது - 2 டேபிள் ஸ்பூன்

எண்ணெய் - 4 டேபிள் ஸ்பூன்

மஞ்சள் தூள் - 1 டீஸ்பூன்

உப்பு - தேவைக்கேற்ப

கொத்தமல்லித் தழை - 2 டேபிள் ஸ்பூன்

செய்முறை:

நறுக்கிய காய்கறிகளை வேக வைக்கவும். காய்ந்த மிளகாய், தனியா, ஏலக்காய், கிராம்பு, பட்டை, சீரகம், சோம்பு, மிளகு இவற்றை ஒவ்வொன்றாக மிதமாக வறுத்துக் கொள்ளவும். ஆறியதும் மிக்சியில் போட்டு பொடியாக அரைத்துக் கொள்ளவும்.

வாணலியில் 2 டேபிள் ஸ்பூன் எண்ணெய் ஊற்றி சூடானதும், நறுக்கிய வெங்காயத்தைப் போட்டு கண்ணாடி பதம் வரும் வரை வதக்கவும். பின்பு அதில் தக்காளி சேர்த்து நன்றாக வதங்கியதும் அடுப்பில் இருந்து இறக்கி ஆற வைக்கவும். பின்னர் அதை மிக்சியில் போட்டு விழுதாக அரைத்துக் கொள்ளவும்.

மற்றொரு வாணலியில் மீதமிருக்கும் 2 டேபிள் ஸ்பூன் எண்ணெய் ஊற்றி சூடானதும் பட்டை, சோம்பு, பிரியாணி இலை போட்டு தாளிக்கவும். அதில் அரைத்த விழுதை சேர்த்து வதக்கவும். பிறகு வேக வைத்த காய்கறிகளைச் சேர்க்கவும். பின்னர் மசாலாப் பொடி, மஞ்சள் தூள், இஞ்சி பூண்டு விழுது, உப்பு சேர்த்து நன்றாகக் கலந்து கொதிக்க வைக்கவும். அடுப்பில் இருந்து இறக்குவதற்கு இரண்டு நிமிடங்கள் முன்பாக கொத்தமல்லித்தழை தூவவும்.

முள்ளங்கி சப்ஜி

தேவையான பொருட்கள்:

முள்ளங்கி (பொடிதாக நறுக்கியது) - 2 கப்

ஓமம் - ½ டீஸ்பூன்

பச்சை மிளகாய் (பொடிதாக நறுக்கியது) - 2

பெருங்காயப்பொடி - 2 சிட்டிகை

எண்ணெய் - 1½ டேபிள் ஸ்பூன்

செய்முறை:

வாணலியில் எண்ணெய் ஊற்றி சூடானதும், ஓமத்தைப் போட்டு பொரிய வைக்கவும். பின்பு அதில் பச்சை மிளகாய், பெருங்காயப்பொடி சேர்த்து வதக்கவும். பின்னர் நறுக்கிய முள்ளங்கியை சேர்த்து நன்றாக வதக்கவும். தேவையான அளவு உப்பு சேர்க்கவும். இப்போது முள்ளங்கியில் இருந்து சாறு வெளியேற ஆரம்பிக்கும். அது வற்றும் வரை நன்றாக வதக்கவும். முள்ளங்கி முழுவதுமாக வெந்தபின்பு அடுப்பிலிருந்து இறக்கவும்.


Next Story