கம்பு இனிப்பு ரொட்டி


கம்பு இனிப்பு ரொட்டி
x
தினத்தந்தி 20 Nov 2022 1:30 AM GMT (Updated: 20 Nov 2022 1:30 AM GMT)

சிறுதானிய வகையை சேர்ந்த கம்புவை பயன்படுத்தி இனிப்பு ரொட்டி, கம்பு பால்ஸ் தயாரிப்பது குறித்து பார்ப்போம்.

கம்பு இனிப்பு ரொட்டி

தேவையான பொருட்கள்:

கம்பு - 2 கப்

வெல்லம் - ½ கப்

தேங்காய்த் துருவல் - ¼ கப்

முந்திரி (பொடிதாக நறுக்கியது) - ¼ கப்

வெந்நீர் - தேவைக்கு ஏற்ப

உப்பு - ஒரு சிட்டிகை

நெய் - தேவைக்கு

ஏலக்காய் பொடி - ¼ டீஸ்பூன்

வாழை இலை - 1

செய்முறை:

 கம்பை சுத்தப்படுத்தி 10 நிமிடங்கள் தண்ணீரில் ஊறவைக்கவும். பிறகு தண்ணீரை வடிகட்டி ஈரம் போகும் வரை நிழலில் உலர்த்தவும். பின்பு பொடியாக திரித்துக் கொள்ளவும். அந்த மாவை நன்றாக சலித்து எடுக்கவும்  அகலமான பாத்திரத்தில் கம்பு மாவைக் கொட்டி அதனுடன் தேங்காய்த்துருவல், ஏலக்காய் பொடி, நறுக்கிய முந்திரிசேர்த்துக் கலக்கவும். சிறிதளவு தண்ணீரில்உப்பைக் கரைத்து மாவில் தெளித்து மீண்டும்கிளறவும்.

 மற்றொரு பாத்திரத்தில் வெல்லத்தைப் போட்டு சிறிது தண்ணீர் ஊற்றி அடுப்பில் வைத்து மிதமான தீயில் சூடுபடுத்தவும். வெல்லம் கரைந்ததும் வடிகட்டி மாவில் ஊற்றி கலந்து சப்பாத்தி மாவுபதத்துக்கு தயார் செய்யவும்  இப்போது மாவை சப்பாத்தியின் அளவுக்கேற்ப உருண்டையாக உருட்டி வைக்கவும்.

 வாழை இலையில் சிறிது நெய் தடவி ஒவ்வொரு உருண்டையையும் எடுத்து ரொட்டியாகத் தட்டவும்  அதை தோசைக் கல்லில் போட்டு தேவையான அளவு நெய் ஊற்றி இருபுறமும் சிவக்க சுட்டு எடுக்கவும்.

குறிப்பு: வெல்லக் கரைசலும், கம்பு மாவும் நன்றாகக் கலந்தால் மட்டுமே ரொட்டியில் இனிப்பு சரியாக இருக்கும். கம்பு மாவு முழுமையாக வேக சிறிது நேரம் ஆகும் என்பதால் நிதானமாக சுட்டு எடுக்க வேண்டும்.

கம்பு பால்ஸ்

தேவையான பொருட்கள்:

கம்பு மாவு - 1 கப்

வெல்லம் (நன்றாக பொடித்தது) - ½ கப்

நெய் - ¼ கப்

முந்திரி, திராட்சை, பாதாம் (பொடிதாக

நறுக்கியது) - ½ கப்

ஏலக்காய் பொடி - ¼ டீஸ்பூன்

செய்முறை:

 நான்-ஸ்டிக் பாத்திரத்தை அடுப்பில் வைத்து அதில் நெய் ஊற்றி சூடுபடுத்தவும்.

 பின்னர் அதில் கம்பு மாவைக் கொட்டி மிதமான தீயில் பொன்னிறமாக வறுக்கவும்.

 கம்பு மாவு, நெய்யுடன் சேர்ந்து வாசனை வரத்தொடங்கியதும் ஏலக்காய் பொடி, முந்திரி, திராட்சை, பாதாம் ஆகியவற்றை கொட்டிக் கிளறவும். கலவை வறண்டு இருந்தால், மேலும் சிறிது நெய் ஊற்றிக் கிளறி அடுப்பை அணைக்கவும்.

 இப்போது அதில் வெல்லத்தை சேர்த்து நன்றாகக் கலக்கவும்.

 இந்தக் கலவையை நெய் தடவிய பாத்திரத்தில் கொட்டி ஆற வைக்கவும். கை பொறுக்கும் சூட்டில் இருக்கும்போது சிறு சிறு உருண்டைகளாக பிடிக்கவும்.

 காற்றுப் புகாத டப்பாக்களில் சேமித்து வைத்தால் ஒரு வாரம் வரை நீடிக்கும்.


Next Story