வெஜ் லாசக்னா


வெஜ் லாசக்னா
x
தினத்தந்தி 11 Dec 2022 1:30 AM GMT (Updated: 11 Dec 2022 1:31 AM GMT)

ரெட் சாஸ் தயாரிப்பதற்காக, மற்றொரு கடாயில் வெண்ணெய் மற்றும் எண்ணெய் ஊற்றி சூடானதும் அதில் பூண்டு, வெங்காயம், மசாலா வகைகள் சேர்த்து நன்றாக வதக்கவும்.

தேவையான பொருட்கள்:

ரொட்டித் துண்டுகள் - 4

சீஸ் (துருவியது) - 3 டேபிள் ஸ்பூன்

காய்கறி தயாரிப்பு:

வெண்ணெய் - 1 டீஸ்பூன்

பூண்டு - 2 பல்

வெங்காயம் - 1

கேரட் - 1

குடைமிளகாய் (சிவப்பு மற்றும் பச்சை) தலா - 1

ஸ்வீட் கார்ன் முத்துக்கள் - 3 டேபிள் ஸ்பூன்

மிக்ஸ்டு ஹெர்ப்ஸ் (பல்பொருள் அங்காடியில் கிடைக்கும்) - ½ டீஸ்பூன்

சில்லி பிளேக்ஸ் - 1 டீஸ்பூன்

உப்பு - தேவையான அளவு

ரெட் சாஸ்:

எண்ணெய் - 2 டீஸ்பூன்

வெண்ணெய் - 1 டீஸ்பூன்

பூண்டு - 2 பல்

சில்லி பிளேக்ஸ் - ½ டீஸ்பூன்

மிக்ஸ்டு ஹெர்ப்ஸ் - ½ டீஸ்பூன்

மிளகுத்தூள் - ¼ டீஸ்பூன்

வெங்காயம் - 1

தக்காளிச் சாறு - 1 ½ கப்

தக்காளி சாஸ் - 2 டேபிள் ஸ்பூன்

மிளகாய்த்தூள் ½ டீஸ்பூன்

உப்பு - தேவையான அளவு

ஒயிட் சாஸ்:

எண்ணெய் - 2 டீஸ்பூன்

வெண்ணெய் - 1 டீஸ்பூன்

மைதா - 2 டேபிள் ஸ்பூன்

பால் - 2 கப்

சீஸ் (துருவியது) - 3 டேபிள் ஸ்பூன்

சில்லி பிளேக்ஸ் - ¼ டீஸ்பூன்

மிக்ஸ்டு ஹெர்ப்ஸ் - ¼ டீஸ்பூன்

உப்பு - தேவையான அளவு

செய்முறை:

ரொட்டித் துண்டுகளை ஒவ்வொன்றாக எடுத்து, சப்பாத்தி போல் மெல்லியதாக தேய்க்கவும். பின்பு அதன் ஓரங்களை அகற்றி, நீள வாக்கில் 2 துண்டுகளாக வெட்டிக் கொள்ளவும்.

கடாயை அடுப்பில் வைத்து சூடானதும் வெண் ணெய்யைப் போட்டு உருக்கவும். அதில் பொடிதாக நறுக்கிய காய்கறிகள், மிக்ஸ்டு ஹெர்ப்ஸ், சில்லி பிளேக்ஸ், உப்பு சேர்த்து கிளறவும். கலவை மொறுமொறுப்பாக வந்ததும் அடுப்பிலிருந்து இறக்கவும்.

ரெட் சாஸ் தயாரிப்பதற்காக, மற்றொரு கடாயில் வெண்ணெய் மற்றும் எண்ணெய் ஊற்றி சூடானதும் அதில் பூண்டு, வெங்காயம், மசாலா வகைகள் சேர்த்து நன்றாக வதக்கவும். பின்பு தக்காளிச் சாறு சேர்த்து கிளறவும். தக்காளியின் பச்சை வாசம் போனதும், தக்காளி சாஸ், உப்பு, மிளகாய்த்தூள் சேர்த்து கெட்டியானவுடன் இறக்கவும்.

ஒயிட் சாஸ் தயாரிப்பதற்காக, மற்றொரு கடாயில் வெண்ணெய் மற்றும் எண்ணெய் ஊற்றி சூடானதும், அதில் மைதாவைச் சேர்த்து, கட்டியில்லாமல் கலக்கவும். பின்னர் மசாலா வகைகள், உப்பு சேர்த்து வதக்கி, பால் ஊற்றி 'சாஸ்' பதத்திற்கு வரும் வரை கிளறவும். பிறகு அதில், துருவிய சீஸ் சேர்த்து நன்றாகக் கலந்து இறக்கவும்.

லாசக்னா அலங்கரிப்பு செய்முறை:

ஒரு பாத்திரத்தில், தக்காளி சாஸ் 2 டேபிள் ஸ்பூன் ஊற்றவும். அதன்மேல் ஒயிட் சாஸ் 2 டேபிள் ஸ்பூன் ஊற்றவும். பின்னர் இரண்டாக வெட்டிய ரொட்டித்துண்டை அதன் மேல் வைத்து, அதற்கு மேலே மீண்டும் ரெட் சாஸ், ஒயிட் சாஸ், காய்கறிக் கலவை, துருவிய சீஸ் போடவும். இவ்வாறு உங்கள் விருப்பத்துக்கேற்ப 2 அல்லது 3 அடுக்குகள் மாற்றி, மாற்றி அலங்கரிக்க வேண்டும்.

அடுப்பில் இட்லி பாத்திரம் அல்லது பெரிய கடாயை வைத்து சூடாக்கவும். அதில் சிறிதளவு தூள் உப்பைச் சேர்த்து 10 நிமிடம் சூடு படுத்தவும். பிறகு அதன் மீது லாசக்னா அலங்கரித்த பாத்திரத்தை வைத்து மூடி 20 நிமிடம் மிதமான தீயில் வேக வைக்கவும். சூடு ஆறியதும் துண்டுகளாக வெட்டி பரிமாறலாம். விருப்பப்பட்டால், நறுக்கிய பசலைக் கீரையையும் இதில் சேர்க்கலாம்.


Next Story