உலக கோப்பை கால்பந்து: போலந்தை வீழ்த்தி அர்ஜென்டினா வெற்றி..!!


உலக கோப்பை கால்பந்து: போலந்தை வீழ்த்தி அர்ஜென்டினா வெற்றி..!!
x

உலக கோப்பை கால்பந்தின் சி பிரிவில் இடம்பெற்றிருந்த அர்ஜென்டினா, போலந்து அணிகள் அடுத்த சுற்றுக்கு முன்னேறியுள்ளன.

தோகா,

உலகக் கோப்பை கால்பந்து திருவிழாவில் நேற்று நள்ளிரவு தோகாவில் உள்ள லூசைல் ஸ்டேடியத்தில் நடந்த 'சி' பிரிவு லீக் ஆட்டத்தில் போலந்து மற்றும் அர்ஜென்டீனா அணிகள் மோதின.

பரபரப்பான தொடங்கிய ஆட்டத்தின் முதல் பாதியில் இரு அணிகளும் கோல் எதுவும் அடிக்கவில்லை. தொடர்ந்து நடைபெற்ற இரண்டாவது பாதியின் 46வது நிமிடத்தில் அர்ஜென்டினா வீரர் அலெக்சிஸ் மேக் அலிஸ்டர் கோல் அடித்து தனது அணியை முன்னிலை பெறச் செய்தார்.

பின்னர் 67வது நிமிடத்தில் ஜூலியன் அல்வரெஸ் ஒருகோல் அடித்து அர்ஜென்டினா வெற்றியை உறுதி செய்தார். கூடுதல் நேரம் வழங்கப்பட்ட நிலையில் போலந்து அணியால் கோல் எதுவும் அடிக்க முடியவில்லை.

பின்னர் ஆட்ட நேர முடிவில் 2-0 என்ற கோல்கணக்கில் வெற்றி பெற்ற அர்ஜென்டினா புள்ளி பட்டியலில் முதல் இடம் பிடித்தது. இரண்டாவது இடத்தை போலந்து அணி பிடித்தது. இதன்படி சி பிரிவில் இடம்பெற்றிருந்த அர்ஜென்டினா, போலந்து அணிகள் அடுத்த சுற்றுக்கு முன்னேறியுள்ளன. இது இருநாட்டு ரசிகர்களையும் மகிழ்ச்சி அடையச் செய்துள்ளது.


Next Story