ரெயிலில் போதை பொருள் கடத்தல்


ரெயிலில் போதை பொருள் கடத்தல்
x

ரெயிலில் போதை பொருள் கடத்திய ஒடிசாவை சேர்ந்த 3 பேரை போலீசாா் கைது ெசய்தனா்.

புதுச்சேரி

புதுச்சேரியில் போதை பொருட்கள் நடமாட்டத்தை தடுக்க காவல்துறை தீவிரமாக கண்காணித்து வருகிறார்கள். அதன்படி அவ்வப்போது கஞ்சா, தடை செய்யப்பட்ட போதை பொருட்கள் விற்பனை செய்பவர்கள் மீது கடுமையான நடவடிக்கையும் எடுத்து வருகிறார்கள். இந்தநிலையில் ஒதியஞ்சாலை போலீஸ் இன்ஸ்பெக்டர் கண்ணன், சப்-இன்ஸ்பெக்டர் முருகன் மற்றும் புதுச்சேரி போதைபொருட்கள் தடுப்புப்பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் வெங்கடாச்சலம் மற்றும் போலீசார் புதுவை ரெயில் நிலையத்தில் இன்று மதியம் சோதனை நடத்தினார்கள். அப்போது புவனேஸ்வரில் இருந்து புதுச்சேரி வந்த ரெயில் பயணிகளின் உடமைகளை சோதனையிட்டனர். இந்த சோதனையில் தடை செய்யப்பட்ட போதை பொருட்கள் கடத்தி வந்த ஒடிசாவை சேர்ந்த முனா (வயது28), பிரதீப் (35), குரு (32) ஆகிய 3 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 5 கிலோ போதை பொருட்களையும் பறிமுதல் செய்தனர்.


Next Story