தற்காலிக பட்டாசு கடை அமைக்க கால அவகாசம் நீட்டிப்பு


தற்காலிக பட்டாசு கடை அமைக்க கால அவகாசம் நீட்டிப்பு
x

தீபாவளி பண்டிகைக்கு தற்காலிக பட்டாசு கடை அமைக்க கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளதாக கலெக்டர் தெரிவித்துள்ளார்.

புதுச்சேரி

தீபாவளி பண்டிகைக்கு தற்காலிக பட்டாசு கடை அமைக்க கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளதாக கலெக்டர் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக கலெக்டர் வல்லவன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

தற்காலிக பட்டாசு கடை

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு புதுச்சேரி பகுதிகளில் தற்காலிக பட்டாசு கடை அமைக்க விரும்புவோர் அதற்கான விண்ணப்பங்களை https://puducherry.dt.gov.in என்ற இணையதளத்தில் crackers shop application for deepawali 2022 என்ற இணைப்பு வழியாக விண்ணப்பங்கள் பெறப்பட்டன.

ஆனால் இணையதள விண்ணப்பம் பற்றி தெரியாததால் பலர் விண்ணப்பிக்க தவறி விட்டனர். இந்தநிலையில் தங்களுக்கு ஒரு வாய்ப்பு வழங்குமாறு அவர்கள் கோரிக்கை விடுத்தனர். அதை ஏற்று இணையதளம் வழியாக விண்ணப்பிக்க ஞாயிற்றுக்கிழமை வரை கால அவகாசம் கொடுக்கப்பட்டுள்ளது. இதற்கு மேல் வாய்ப்பு வழங்கப்பட மாட்டாது.

ஞாயிற்றுக்கிழமை

விண்ணப்பதாரர் விண்ணப்பம் செய்த பிறகு மறக்காமல் விண்ணப்ப எண்ணும், குறிப்பு எண்ணும் கொண்ட ஒப்புகை ரசீதை பிரிண்ட் எடுத்துக் கொள்ள வேண்டும்.

நாளை மறுநாள் வரை உள்ள விண்ணப்பங்கள் மட்டுமே 2022 தீபாவளி தற்காலிக பட்டாசு கடைக்காக பரிசீலனைக்கு ஏற்றுக்கொள்ளப்படும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


Next Story