பிளாஸ்டிக் பொருட்கள் விற்றவருக்கு அபராதம்


பிளாஸ்டிக் பொருட்கள் விற்றவருக்கு அபராதம்
x

தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள்,புகையிலை பொருட்கள் மற்றும் கஞ்சா ஆகியவை விற்கப்படுவது கண்டறியப்பட்டால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். என கொம்யூன் பஞ்சாயத்து ஆணையர் இளமுருகன் கூறியுள்ளார்

திரு-பட்டினம்

நிரவி, திரு-பட்டினம் கொம்யூன் பஞ்சாயத்து ஆணையர் இளமுருகன் தலைமையில் வருவாய் அதிகாரி வீரசெல்வம் மற்றும் ஊழியர்கள் பெட்டிக்கடைகள், மளிகை கடைகள், காய்கறி கடைகளில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்கப்படுகிறதா? என ஆய்வு மேற்கொண்டனர். ஆய்வின்போது திரு-பட்டினத்தில் உள்ள கடையில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் விற்பனை செய்வது கண்டுபிடிக்கப்பட்டது. அவை பறிமுதல் செய்யப்பட்டதுடன் கடை உரிமையாளருக்கு ரூ.2,500 அபராதம் விதிக்கப்பட்டது.

இதுகுறித்து ஆணையர் இளமுருகன் கூறுகையில், 'நிரவி, திரு-பட்டினம் பகுதியில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் மற்றும் கஞ்சா ஆகியவை விற்கப்படுவது கண்டறியப்பட்டால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். அத்துடன் இதுபோன்ற ஆய்வுகள் தொடர்ந்து நடைபெறும்' என்றார்.


Next Story