மின்சாரம் தடை செய்யப்படும் இடங்கள்


மின்சாரம் தடை செய்யப்படும் இடங்கள்
x

புதுச்சேரி மரப்பாலம் துணை மின்நிலையத்தில் இருந்து வரும் உயர்மின் அழுத்த பாதையில் சில பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் ஒரு சில இடங்களில் மின்தடை செய்யப்படுகிறது.

புதுச்சேரி

புதுச்சேரி மரப்பாலம் துணை மின்நிலையத்தில் இருந்து வரும் உயர்மின் அழுத்த பாதையில் சில பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. எனவே நாளை (வெள்ளிக்கிழமை) காலை 10.30 மணி முதல் மதியம் 2 மணி வரை மின்சாரம் தடை செய்யப்பட உள்ள பகுதிகள் வருமாறு:-

எல்லையம்மன் கோவில் தோப்பு, காளியம்மன் கோவில் தோப்பு, ஜெயராம் செட்டியார் தோட்டம்-4, 5-வது குறுக்கு தெரு, தாமரை நகர், ராஜராஜன் வீதி, முருகசாமி நகர், ஈஸ்வரன் கோவில் தோப்பு, இந்திராநகர், பாரதிதாசன் வீதி, பிரான்சுவா தோப்பு, ஏழை பிள்ளையார் தோப்பு மற்றும் அதனை சார்ந்த பகுதிகளில் மின் நிறுத்தம் செய்யப்படும்.

இத்தகவலை மின்துறை செயற்பொறியாளர் ஒரு செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார்.


Next Story