குடிசைமாற்று வாரிய ஊழியர்கள் நூதன போராட்டம்


குடிசைமாற்று வாரிய ஊழியர்கள் நூதன போராட்டம்
x

குடிவைமாற்று வாரிய ஊழியர்கள் காலி சிலிண்டர், பாத்திரங்களுடன் நூதன போராட்டத்தில் ஈடுப்பட்டனர்.

புதுச்சேரி

புதுச்சேரி குடிசை மாற்று வாரிய அனைத்து ஊழியர்கள் நல சங்கத்தினர் தங்களுக்கு நிலுவை சம்பளம் வழங்க வேண்டும், நிரந்தர சம்பளத்திற்கு நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும் என்பன உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதில் இன்று 7-வது நாளாக உள்ளிருப்பு போராட்டம் நடந்தது. போராட்டத்திற்கு சங்க தலைவர் பழனிநாதன் தலைமை தாங்கினார். செயலாளர் கோவிந்தராசு, பொருளாளர் ஆனந்தன் உள்பட பலர் கலந்து கொண்டனர். அவர்கள் காலியான கியாஸ் சிலிண்டர், பாத்திரங்களை வைத்து நூதன முறையில் போராட்டத்தில் ஈடுபட்டனர்.


Next Story