எஸ்.டி.பி.ஐ. கட்சியினர் ஆர்ப்பாட்டம்


எஸ்.டி.பி.ஐ. கட்சியினர் ஆர்ப்பாட்டம்
x

தேசிய முகமையை கண்டித்து எஸ்.டி.பி.ஐ. கட்சியினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்

புதுச்சேரி

எஸ்.டி.பி.ஐ. நிர்வாகிகள் கைது செய்யப்பட்டதை கண்டித்து புதுச்சேரி சுதேசி மில் அருகே கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. எஸ்.டி.பி.ஐ. புதுவை மாநில துணைத்தலைவர் முகமது பிலால் தலைமை தாங்கினார். இதில் பொருளாளர் ரபீக் மன்சூர், செயற்குழு உறுப்பினர் முகமது காசிம், வர்த்தக அணி ஒருங்கிணைப்பாளர் ஹனிபா, பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா தலைவர் ஜாகீர் உசேன் உள்ளிட்ட பல்வேறு அமைப்புகளை சேர்ந்த நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.

ஆர்ப்பாட்டத்தில் சோதனை என்ற பெயரில் எஸ்.டி.பி.ஐ. நிர்வாகிகளை கைது செய்த தேசிய புலனாய்வு முகமையை கண்டித்து கோஷங்கள் எழுப்பப்பட்டன. முடிவில் பொதுச்செயலாளர் சரத்பாஷா நன்றி கூறினார்.


Next Story