2 குழந்தைகள் உள்பட 8 பேருக்கு பன்றிக்காய்ச்சல்


2 குழந்தைகள் உள்பட 8 பேருக்கு பன்றிக்காய்ச்சல்
x

புதுச்சேரியில் 470 குழந்தைகள் வைரஸ் காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளனர். 2 குழந்தைகள் உள்பட 8 பேர் பன்றிக்காய்ச்சல் பாதிப்புக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

புதுச்சேரி

புதுச்சேரியில் 470 குழந்தைகள் வைரஸ் காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளனர். 2 குழந்தைகள் உள்பட 8 பேர் பன்றிக்காய்ச்சல் பாதிப்புக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

8 பேருக்கு பன்றிக்காய்ச்சல்

புதுவையில் கடந்த சில நாட்களாக பரவி வரும் வைரஸ் காய்ச்சலால் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைத்து தரப்பினரும் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இதனால் அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் நோயாளிகள் கூட்டம் அலை மோதுகிறது. இதற்காக சிகிச்சை அளிக்க அரசு மருத்துவமனையில் சிறப்பு வார்டுகள் அமைக்கப்பட்டுள்ளன. இங்கு 24 மணி நேரமும் டாக்டர்கள் மற்றும் செவிலியர்கள் பணியில் உள்ளனர்.

இது தவிர தொடர்ந்து சளி, காய்ச்சல் இருப்பவர்களின் ரத்த மாதிரிகள் சேகரிக்கப்பட்டு பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்படுகிறது. இதில் இன்று காய்ச்சலால் பாதிக்கப்பட்ட குழந்தைகள், பெரியவர்கள் என 108 பேரின் ரத்த மாதிரிகள் பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டது. இதில் 2 குழந்தைகள் உள்பட 8 பேருக்கு பன்றிக்காய்ச்சல் உறுதி செய்யப்பட்டது. அவர்கள் 8 பேரும் வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

470 குழந்தைகள்

இந்த நிலையில் புதுச்சேரி, காரைக்காலில் இன்று 470 குழந்தைகள் காய்ச்சலால் பாதிக்கப்பட்டு அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்றனர். இன்றைய நிலவரப்படி ராஜீவ்காந்தி மகளிர் மற்றும் குழந்தைகள் ஆஸ்பத்திரி, இந்திராகாந்தி அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரி, காரைக்கால் அரசு ஆஸ்பத்திரிகளில் 188 குழந்தைகள் உள்நோயாளிகளாக அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இவர்களை தவிர தனியார் ஆஸ்பத்திரியில் பலர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இதுகுறித்து சுகாதாரத்துறை இயக்குனர் ஸ்ரீராமுலு கூறுகையில், 'காய்ச்சல் குறித்து பொதுமக்கள் அச்சப்படத்தேவையில்லை. காய்ச்சல் அறிகுறி இருந்தால் உடனடியாக அரசு மருத்துவமனைக்கு வந்து சிகிச்சை பெற வேண்டும்' என்றார்.


Next Story