கடற்கரை, திருக்காஞ்சியில் முன்னோர்களுக்கு தர்ப்பணம்


கடற்கரை, திருக்காஞ்சியில் முன்னோர்களுக்கு தர்ப்பணம்
x

மகாளய அமாவாசையை முன்னிட்டு புதுவை கடற்கரை, திருக்காஞ்சியில் முன்னோர்களுக்கு தர்ப்பணம் வழங்கப்பட்டது.

புதுச்சேரி

மகாளய அமாவாசையை முன்னிட்டு புதுவை கடற்கரை, திருக்காஞ்சியில் முன்னோர்களுக்கு தர்ப்பணம் வழங்கப்பட்டது.

மகாளய அமாவாசை

அமாவாசையையொட்டி நம் முன்னோர்களுக்கு தர்ப்பணம் (திதி) கொடுப்பது வழக்கம். குறிப்பாக புரட்டாசி மாதத்தில் வரும் மகாளய அமாவாசை முக்கியத்துவம் வாய்ந்தது. அதன்படி இன்று மகாளய அமாவாசையையொட்டி புதுச்சேரி கடற்கரையில் ஏராளமானோர் தங்கள் முன்னோர்களுக்கு காய்கறிகளால் படையலிட்டு வழிபட்டனர். மேலும் கடலில் இறங்கி புனித நீராடினர். தற்போது கடற்கரையில் செயற்கை மணல் பரப்பு உருவாகி உள்ளதால் தர்ப்பணம் கொடுப்பவர்களுக்கு ஏதுவாக இருந்தது.

திருக்காஞ்சி

வில்லியனூரை அடுத்த திருக்காஞ்சி கங்கவராக நதீஸ்வரர் கோவிலில் சங்கராபரணி ஆற்றின் கரையோரம் தர்ப்பணம் கொடுக்கும் நிகழ்ச்சி நடந்தது. இன்று அதிகாலை முதல் வில்லியனூர் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் இருந்து வந்த பொதுமக்கள் தங்கள் முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்தனர். பின்னர் சங்கராபரணி ஆற்றில் குளித்த அவர்கள் திருக்காஞ்சி கோவிலில் சாமி தரிசனம் செய்தனர்.

காரைக்கால் கடற்கரையில் மகாளய அமாவாசையையொட்டி முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்து வழிபட்டனர்.


Next Story