வீடு வீடாக சென்று உதவித்தொகைக்கான ஆணை வழங்கிய அமைச்சர்


வீடு வீடாக சென்று உதவித்தொகைக்கான ஆணை வழங்கிய அமைச்சர்
x

புதுச்சேரி மாநிலத்தில் முதியவர்கள், விதவைகள், கணவரால் கைவிடப்பட்டவர்கள், மாற்றுத்திறனாளிகள் உள்பட பல்வேறு தரப்பினருக்கு மாதந்தோறும் வழங்கப்படும் உதவித்தொகை ஆணையை அமைச்சர் வழங்கினார்.

வில்லியனூர்

புதுச்சேரி மாநிலத்தில் முதியவர்கள், விதவைகள், கணவரால் கைவிடப்பட்டவர்கள், மாற்றுத்திறனாளிகள் உள்பட பல்வேறு தரப்பினருக்கு அரசு சார்பில் மாதந்தோறும் உதவித்தொகை வழங்கப்பட்டு வருகிறது. உதவித்தொகைக்காக விண்ணப்பித்து பல ஆண்டுகளாக காத்திருந்த பயனாளிகளுக்கு சமீபத்தில் முதல்-அமைச்சர் ரங்கசாமி உதவித் தொகைக்கான ஆணையை வழங்கி தொடங்கி வைத்தார். இதன் தொடர்ச்சியாக புதுவை அரசு மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு துறை சார்பில் மங்கலம் தொகுதி சங்கரன்பேட்டையை சேர்ந்த முதியோர், விதவை பயனாளிகளுக்கு வீடு வீடாக சென்று அமைச்சர் தேனீ.ஜெயக்குமார் உதவித்தொகைக்கான ஆணையை வழங்கினார்.

பயனாளிகளுக்கு சிரமமின்றி அவர்களது வீடு தேடி சென்று உதவித்தொகை வழங்கிய அமைச்சரின் நடவடிக்கைக்கு பலரும் பாராட்டு தெரிவித்துள்ளனர்.


Next Story