நல்ல உறக்கம்..நன்மைகள் ஆயிரம்..!
நினைவாற்றல் வளர்ச்சி என்பது உறக்கத்தின் போது மட்டுமே நடைபெறுகிறது.
நோய் எதிர்ப்பாற்றல் நன்கு திறம்பட வேலைசெய்ய உறக்கம் மிகவும் முக்கியமானது.
உறக்கம் நம் உடலின் வெப்பநிலையைச் சீர்செய்ய உதவுகிறது. உடல் வளர்ச்சிக்கு அது மிகவும் தேவையானது.
ஆழ்ந்த உறக்கத்தின்போதுதான் ஒரு தலைமுறையில் இருந்து மற்றொரு தலைமுறைக்குச் செல்லக்கூடிய மரபணுவில் மாறுதல்கள் நடைபெறுகின்றன.
நம் உடலில் உள்ள தசைகள், உறுப்புகள் ஓய்வு எடுத்து மறுநாள் நாம் நன்கு பணியாற்றுவதற்கு உதவி புரிகின்றன.
உறக்கம் மூளையில் உள்ள சைனாப்ஸ் எனப்படும் இணைப்புகளை வலுப்படுத்துகின்றது.