ஆஸ்துமா ஏற்படுவதற்கான காரணங்கள்..!
ஆஸ்துமா என்பது பரம்பரை மற்றும் சுற்றுச்சூழல் காரணிகளின் கலவையாக இருக்கலாம் என்று நம்பப்படுகிறது.
சிகரெட் புகை,வாகன புகை மற்றும் தொழிற்சாலை புகையின் காரணமாக ஆஸ்துமா ஏற்பட வாய்ப்புள்ளது.
ஒவ்வாமை ஏற்படுத்தும் வாசனை திரவியம் மற்றும் கழிவுகளின் வாசனை போன்றவை ஆஸ்துமா பாதிப்பை உண்டாக்கும்.
அதிகமாக மன அழுத்தம்,மகிழ்ச்சி, கவலை மற்றும் உணர்ச்சிவசப்படுதல் போன்ற மனம் சார்ந்த பிரச்சினைகள் ஆஸ்துமா பாதிப்பை ஏற்படுத்தும்.
குளிரான தட்பவெப்ப நிலை, கடுமையான வெப்பம் போன்றவை ஆஸ்துமாவை வரவேற்கும் தன்மைக்கொண்டது.
ஒவ்வாமையை தூண்டும் உணவை எடுத்துக்கொள்வதன் மூலம் ஆஸ்துமா பாதிப்பு ஏற்படலாம்.