வெடிகளை வெடிக்கும்போது செய்ய வேண்டியவை.. செய்ய கூடாதவை!!
வீட்டில் உள்ள குழந்தைகள் பட்டாசுகளை வெடிக்கும் போது அவர்களுடைய பாதுகாப்பை பெரியவர்கள் உறுதி செய்ய வேண்டும்.
பட்டாசுகளை தயாரிக்க பயன்படுத்தப்படும் ரசாயனங்கள் கண்களுக்கு ஆபத்தானவை. வெடிக்கும் போது கண்களில் பட்டால் பார்வை இழக்கவும் வாய்ப்புண்டு.
தொடர்ச்சியாக பட்டாசு வெடிப்பதனால் வெளியாகும் புகை கண்களில் எரிச்சலை உண்டாக்கும் அல்லது கண்களில் இருந்து நீர் வெளியாகும்.
செய்ய வேண்டியவை: தரமான பட்டாசு உற்பத்தியாளரிடம் இருந்து பட்டாசுகளை வாங்கவும்.
பட்டாசு வெடிக்கும் போது பக்கெட் நிறைய தண்ணீர் அல்லது மணல் வைக்கவும்.
பட்டாசு வெடிக்கும் இடத்தில் எளிதில் தீப்பிடிக்கும் பொருட்கள் எதுவும் இல்லை என உறுதி செய்யவும்.
செய்யக் கூடாதவை: குழந்தைகளை தனியாக பட்டாசு வெடிக்க அனுமதிக்காதீர்கள்.
எளிதில் தீப்பற்றும் ஆடைகளை அணிந்து பட்டாசு வெடிக்க வேண்டாம்; காட்டன் துணிகள் அணிந்து வெடிக்கலாம்.
பட்டாசு வெடித்து காயம் ஏற்பட்டால் அங்கு எண்ணெய் அல்லது பரிந்துரைக்கப்படாத க்ரீம் தடவாதீர்கள்.
வீட்டில் பட்டாசுகளை விளக்கு மற்றும் ஊதுபத்தி அருகில் வைக்காதீர்கள்.