இந்தந்த அறிகுறிகள் தெரியுதா? அப்போ கல்லீரல் பிரச்சினையா இருக்கலாம்..!
கால்களில் வீக்கம் : கல்லீரல் சரியாக செயல்படாமல் இருந்தால், கால்களில் லேசாக வீக்கம் அவ்வப்போது ஏற்படும்.
வயிற்று உப்புசம் மற்றும் வலி : கல்லீரலானது தீவிரமாக பாதிக்கப்பட்டிருந்தால் தான், கல்லீரலில் கட்டிகள் உருவாகும். இதனால் வலி எடுப்பதோடு, வயிறு உப்புசத்துடனும் இருக்கும்.
வாந்தி, சோர்வு, காய்ச்சல் : உங்களுக்கு கல்லீரல் அழற்சி இருந்தால், வாந்தி, சோர்வு, காய்ச்சல், மயக்கம், குளிர் போன்றவற்றை சந்திக்கக்கூடும்.
தலைச்சுற்றல் : ஆல்கஹால் அதிகம் பருகுவதால் கல்லீரல் பாதிக்கக்கூடும், இதனால் தலைச்சுற்றல் மற்றும் குழப்பம் அடிக்கடி ஏற்படும்.
சோர்வு : நாள்பட்ட சோர்வு கூட கல்லீரல் பிரச்சனைக்கான அறிகுறியே.
அடர் நிற சிறுநீர் : கல்லீரலில் பிரச்சனைகள் இருந்தால், உங்கள் சிறுநீர் அடர் மஞ்சள் நிறத்தில் வெளிவரும்.