வீட்டிலேயே ராகி கேக் செய்வது எப்படி ? வாங்க பார்க்கலாம்.!
முதலில் ஒரு மிக்சி ஜாரில் இரண்டு முட்டைகளை உடைத்து ஊற்ற வேண்டும்.
பின்னர் அதில் ஆயில், கோ கோ பவுடர் மற்றும் வெனிலா எசன்ஸ் சேர்த்து நன்றாக அடித்துக்கொள்ள வேண்டும்.
அதன்பிறகு ராகி மாவு, நாட்டு சர்க்கரை, பேக்கிங் சோடா மற்றும் பேக்கிங் பவுடர், தேவைப்பட்டால் சிறிதளவு பால் சேர்த்து மிக்சியில் அடித்து எடுத்துக்கொள்ள வேண்டும்.
இதனை வெண்ணெய் தடவிய ஒரு கேக் மோல்டில் ஊற்றி குக்கரில் வேக வைத்து எடுத்தால் சுவையான, ஊட்டச்சத்து நிறைந்த ராகி கேக் தயார்.