கோடை காலத்தில் வியர்க்குரு வராமல் தடுப்பது எப்படி...?
சந்தனம்,மஞ்சள் மற்றும் ரோஸ் வாட்டர் கலந்து உடம்பில் தடவுவதன் மூலம் வியர்க்குரு வருவதை தடுக்கலாம்.
முல்தானி மெட்டியை ரோஸ் வாட்டரில் கலந்து வியர்குருவை விரட்ட பயன்படுத்தலாம்.
பருத்தித் துணியை குளிர்ந்த நீரில் நனைத்து உடலில் போர்த்தி ஈரம் காயும் வரை வைத்திருப்பது மூலம் வியர்க்குரு வருவதை தடுக்கலாம்.
அறுகம்புல், மஞ்சள் இரண்டையும் சேர்த்து அரைத்து உடலில் தேய்த்துக் குளிப்பதன் மூலம் வியர்க்குரு வருவதை தடுக்கலாம்.
பாசிப் பயறு, கடலைப்பருப்பு, வெந்தயம் கலந்த பொடியை தேய்த்துக் குளிப்பதால் வியர்வை பிரச்சினையை குணப்படுத்தலாம்.
கற்றாழையின் உள் பகுதியை எடுத்து சோப்புபோல தேய்த்துக் குளித்தால், வியர்வை பிரச்சினை நீங்கும்.