ஜாதிக்காயில் காணப்படும் பாக்டீரியா எதிர்ப்பு மற்றும் வீக்க எதிர்ப்பு பண்புகள் முகப்பருவை எதிர்த்து போராடி தெளிவான சருமத்தை தருகிறது.
ஜாதிக்காயில் காணப்படும் ஊட்டச்சத்துக்கள் மனநிலையை மேம்படுத்தி, மன அழுத்தத்தை குறைத்து, நினைவாற்றலை ஊக்குவிக்கிறது.
இது செரிமானத்தைத் தூண்டி வயிற்று உப்புசம் மற்றும் அஜீரணத்தால் ஏற்படும் அறிகுறிகளை குறைக்கிறது.
தூக்கத்தை தூண்ட உதவும் பண்புகள் ஜாதிக்காயில் இயற்கையாகவே காணப்படுகிறது.
மாதவிடாய் வலி மற்றும் சீரற்ற மாதவிடாயை அனுபவிக்கும் பெண்களுக்கு ஜாதிக்காய் ஒரு சிறந்த தேர்வாகும். இதில் இருக்கும் வீக்க எதிர்ப்பு பண்புகள் மாதவிடாய் வலியை குறைக்கக்கூடும்.
மெக்னீசியம், காப்பர் மற்றும் மாங்கனீசு போன்ற ஊட்டச்சத்துக்கள் நிறைந்த ஜாதிக்காய் பாலியல் ஆரோக்கியத்திற்கு பேராதரவு அளிக்கலாம்.
ரத்தத்தில் கொழுப்பைக் குறைப்பதிலும், வெள்ளை அணுக்களில் ஏற்படும் ரத்தப் புற்றுநோயைத் தடுப்பதிலும் ஜாதிக்காய் உதவக்கூடும்.
ரத்த சர்க்கரை அளவை கணிசமாக குறைத்து, கணைய செயல்பாட்டை மேம்படுத்தலாம்.
நீங்கள் ஜாதிக்காய் உணவில் எடுப்பதாக இருந்தால் மருத்துவரை அணுகி உரிய ஆலோசனையின் பெயரில் எடுக்கலாம்.