கோடை வெயிலும் கர்ப்பிணி பெண்களும்..!
அடிக்கடி அதிகமான அளவு தண்ணீர் குடிக்க வேண்டும்.
சுத்தமான பருத்தி உடைகளை அணிய வேண்டும். வெயிலில் செல்வதை தவிர்க்க வேண்டும்.
அவசியமாக வெளியே செல்ல வேண்டியிருந்தால் குடை பயன்படுத்தலாம். கருப்பு நிற குடையை தவிர்க்க வேண்டும்.
உணவுகளை 5 வேளையாக பிரித்து சாப்பிட வேண்டும். காரமான, புளிப்பான உணவுகளை தவிர்ப்பது நல்லது.
குளிர்ந்த நீரில் குளிப்பது நல்லது.
நீர்ச்சத்து நிறைந்த பானங்கள்,பழங்கள் மற்றும் காய்கறிகளை எடுத்துக்கொள்ள வேண்டும்.