கோடை விடுமுறையை கொண்டாடுவதற்கு ஏற்ற சுற்றுலாத்தலங்கள்..!
மூணாறு,கேரளா : ஆழமான பள்ளத்தாக்குகள், வியக்க வைக்கும் மலைகள், அழகான தேயிலை தோட்டங்கள் அனைத்தும் கண்களுக்கு விருந்தாக அமையும். இங்கு மலையேற்றம்,மாட்டுப்பட்டி அணை போன்ற பல்வேறு இடங்கள் உள்ளது.
வயநாடு,கேரளா: கலாச்சாரம் மற்றும் பாரம்பரியத்தை பறைசாற்றும் விதமான அமைந்துள்ள வயநாடு பகுதியில் பல விதமான தாவரங்கள் மற்றும் விலங்குகள் அதிகளவில் உள்ளது.அமைதியை விரும்புபவர்களுக்கு ஏற்ற இடமாகும்.
ஊட்டி,தமிழ்நாடு : ஏரி, ரோஸ் கார்டன், கல்ஹட்டி நீர்வீழ்ச்சி, டைகர் ஹில்ஸ், தொட்டபெட்டா சிகரம் போன்ற இயற்கை நிறைந்த இடமாகும்.
குடகு மலை : கர்நாடக மாநிலத்தில் அமைந்துள்ளது. மலைகளால் சூழப்பட்ட இந்த பகுதி கோடை வெயிலுக்கு சுற்றுலா பயணிகளுக்கு விருந்தாக அமையும்.
இடுக்கி,கேரளா: மேற்குத் தொடர்ச்சி மலையின் அழகை ரசிப்பதோடு வனவிலங்குகள், இயற்கை எழில் கொஞ்சும் மலைகள், தேயிலை தோட்டங்கள் மற்றும் ரப்பர் தோட்டங்கள் இங்கு புகழ் பெற்று விளங்குகிறது.
கொடைக்கானல்,தமிழ்நாடு: மேற்குத் தொடர்ச்சி மலையில் அமைந்திருக்கும் இயற்கை அழகு, குளிர்ந்த காலநிலை மற்றும் வசீகரிக்கும் நிலப்பரப்புகளுடன் பயணிகளை ஈர்க்கும் அமைதியான மலைவாசஸ்தலம் ஆகும்.